Scripture வேதவசனம்: சங்கீதம் 116:1. கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.
2. அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
2. அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
Observation கவனித்தல்: இந்த சங்கீதத்தின் ஆசிரியர் இரு விசயங்களைக் குறித்து மகிழ்கிறார். முதலாவது அவர் தேவனுக்கு செவிகொடுக்கிறார். தேவனால் கேட்க முடியும். இஸ்ரவேலரின் தேவனுக்கும் அவர்களைச் சுற்றிலும் இருந்த புறஜாதியாரின் தேவனுக்கும் எவ்வள்வு வித்தியாசம்: அவை விக்கிரகங்களேயன்றி, கேட்க முடியாது. முதலாவது முக்கியம் என்றால், இரண்டாவது அதிலும் முக்கியமானது ஆகும். தேவன் குறிப்பாக அவரின் ஜெபங்களுக்குச் செவிகொடுக்கிறார். சங்கீதக்காரன் சொல்வதில், தேவனை மையமாக வைத்து இருப்பதைக் காணலாம். சங்கீதக் காரன் சொல்வது முக்கியம் என்பதைப் போல, தேவன் அதற்உச் செவிகொடுக்கிறார்.
Application பயன்பாடு: செவிகள் உள்ளவர்களை நான் பார்க்க முடியும் என்பதை அறிந்திருக்கிறேன்.
நான் அவர்களைப் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை. அவர்கள் மிகவும் அலுவலாய் இருக்கிறார்கள். அவர்கள் செவிகொடுக்கத்தக்க முக்கியமானவர்கள் இருக்கக் கூடும். ஆயினும், தேவனைக் காட்டிலும் முக்கியமானவர்கள் எவருமிலர். அவரைப் பார்க்கிலும் மிகுந்த அலுவல் உள்ளவர் வேறில்லை. அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்.என்ன ஆச்சரியம் பாருங்கள்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, சங்கீதக்காரனைப் போல, நீர் செவிகொடுக்கிறவராக இருக்கிறபடியால், நான் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை தொழுவேன். ஆமென்.
No comments:
Post a Comment