Sunday, October 6, 2013

அவருடைய சொரூபம்

Scripture வேதவசனம்:   Luke (NIV) 20:22  இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
23. அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
24. ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்
25. அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

Observation கவனித்தல்: நாணயத்தில் இருக்கும் சீசரின் சொரூபம் அவருடைய ஆளுகையைக் குறிக்கும் என்றால், தேவனுடைய சொரூபத்தை உடையது அவருடைய ஆளுகையைக் குறிப்பதாக நிச்சயமாகவே இருக்கும்.
 
Application பயன்பாடு: ஒரு பாடல் இப்படியாக வருகிறது, ” நான் அவருடைய சாயலிரும் உருவிலும் உருவாக்கப்பட்டிருக்கிறேன். நான் கர்த்தரை சேவிப்பதற்காக பிறந்தேன். அதை என்னால் மறுக்க முடியாது”
  
Prayer ஜெபம்:  கர்த்தாவே, நான் உம் சொருபத்தை உடையவனாக இருக்கிறேன். நீர் என்னுள் வாழும்படி என்னைத்தெரிந்திருக்கிறீர்.  இன்று மற்றவர்கள் என்னில் உள்ள உம்மை அடையாளங்கண்டு கொள்ள உதவும். ஆமென்.

No comments:

Post a Comment