Scripture வேதவசனம்: மத்தேயு 24:12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
13. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
13. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
Observation கவனித்தல்: இயேசு இறுதிக் காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். உலகில் அனேக குழப்பங்களும் , அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அனேக பிரச்சனைகளும் உண்டாகும். அக்காலங்களைக் கடந்து செல்வது என்பது எளிதானதாக இருக்காது. ஆனால், அதை உறுதியாக நின்று சகிப்பவர்களுக்கு இரட்சிப்பு வாக்குபண்ணப்பட்டிருக்கிறது.
Application பயன்பாடு: எல்லோரையும் போல, என் விசுவாசமும் சோதிக்கப்படும். நான் எவ்வளவு விசுவாசம் பெற்றிருக்கிறேன் என்பதைக் காட்டிலும், எவ்வளவு காலம் நிலைத்திருக்கிறேன் என்பதே முக்கியமானதாக இருக்கும். அது முடிவு பரியந்தம் நிலைத்திருக்க வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, முடிவுபரியந்தம் நான் விசுவாசத்தில் நிலைத்திருக்க, உம் வசனம் என் மனதிலும் சிந்தையிலும் விதைக்கப்பட்டிருக்க வேண்டும். உம் பிரசன்னத்தைப் பற்றிய உணர்வை எனக்களிக்கும்படி உம் பரிசுத்த ஆவியானவர் எனக்குத் தேவை. உள்ளபடி, என்னால் இதைச் செய்ய முடியாது. நீர் அதை அறிந்து அதற்காக முன்னேற்பாடுகளைச் செய்திருக்கிறபடியால் உமக்கு நான் மிகவும் நன்றி உள்ளவராக இருக்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment