Tuesday, December 3, 2013

ஆசீர்வாதமாக இருக்கும்படி ஆசீர்வதிக்கப்படுதல்

Scripture வேதவசனம்: ரோமர் 15:1 அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
2. நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
3. கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்...

Observation கவனித்தல்: தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் (ஆதி.12:1-3) பூமியில் உள்ள வம்சங்கள் எல்லாம் ஆபிரகாமுக்குள் ஆசீர்வதிக்கப்பட காரணமாயிற்று. தேவன் நமக்கு தரும் வல்லமைகள் அவை மிகவும் அதிக பிரயோஜனமாக இருக்கும்படியே தரப்படுகிறது.
 
Application பயன்பாடு: என் பலத்தை எனக்கு நன்மை செய்கிற ஆசீர்வாதமாக கருதுவது தவறு ஆகும். நான் இயேசுவைப் போல மாற விரும்பினால், என் வல்லமையை மற்றவர்களின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும். நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி தேவன் என்னை ஆசீர்வதித்திருக்கிறார்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, இன்று நீர் என் வாழ்வில் வைத்திருக்கும் நன்மைகளை நான் மற்றவர்களுக்காக பயன்படுத்துபவனாக வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.

No comments:

Post a Comment