Showing posts with label பயன். Show all posts
Showing posts with label பயன். Show all posts

Monday, September 26, 2011

SOAP 4 Today -பிட்கப்படுதல் (உடைக்கப்படுதல்)

வாசிக்க வேண்டிய வேத பகுதி : எஸ்றா 4; சங்கீதம்113,127; லூக்கா 9.

Scripture வேத வசனம்: லூக்கா 9:16 அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.
17. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.

Observation கவனித்தல்: அப்பங்கள் பிட்கப்படுகிற வரையிலும் பெருக வில்லை. பசியுள்ளவர்களை போஷிக்க இயேசு பயன்படுத்திய அப்பங்கள் பிட்கப்பட்ட பின் பெருகியது உண்மையாக இருப்பது போலவே தேவையுள்ளவர்களுக்கு அவர் பயன்படுத்துகிற தம் ஊழியர்களின் வாழ்க்கையிலும் அது பேருண்மையாக இருக்கிறது. அந்த அப்பங்கள் பிட்கப்பட்ட போது அவை அவருடைய கரங்களில் தாம் இருந்தன. அவர் மற்றவர்களுக்கு கொடுக்கும்படி கொடுக்கும்வரையிலும் அவருடைய கரங்களில் அவை இருந்தன. அந்த பிட்கப்பட்ட துணிக்கைகள் தாம் பசித் தேவையுடன் இருந்த ஜனங்களின் தேவையைப் போக்கின.

Application பயன்பாடு: பிட்கப்படுதல் என்பது மோசமான ஒரு காரியம் அல்ல. நான் இயேசுவின் கரங்களில் இருந்தால் அது நன்மையான காரியமாக இருக்க முடியும். உண்மையில், பிட்கப்பட்ட என்னை அவர் பசியுள்ளவர்களிடத்தில் வைக்கிற படியினால் பிட்கப்படுதல் என்பது மிகவும் பயனுள்ளதாகவே காணப்படுகிறது.

Prayer ஜெபம்: கர்த்தாவே, ” இயேசுவே என்னை பயனடுத்தும், ஆண்டவரே என்னை வேண்டாமென்று சொல்லிவிடாதிரும். நிச்சயமாகவே, நான் செய்யக்கூடிய பணி உண்டு . அது தாழ்மையானதாக இருப்பினும், உமக்குப் பணிசெய்வதற்கு கொடுக்கக் கூடிய விலைக்கிரயம் அதிகமானதாக இருப்பினும், ஆண்டவரே என் விருப்பம் உமக்குப் பணிந்து போகும்படி எனக்குதவும். ஆமென்.

Saturday, July 2, 2011

பயனுள்ளது பயனற்றதாகுதல்

வாசிக்க: ஏசாயா 6,7; 2 நாளாகமம் 26,27.

Scripture வேதவசனம்: 10 என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.

11. பிலமோன் முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.
12. அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன், என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.

Observation கவனித்தல்: இந்தச் சிறிய நிருபத்தை வாசிக்கும் போது , தங்கள் பெயருக்குப் பொருத்தமான வாழ்க்கை வாழாத நபர்கள் உண்டு என்று எண்ணுகிறேன். ஒநேசிமு என்ற பெயர் ஒரு வேலையாளுக்குச் சரியான பெயராக இருக்கும். ஏனெனில் ஒநேசிமு என்பதற்கு “ பயனுள்ளவன்” என்று பொருள். ஆனால் இந்த் ஒநேசிமு தன் எஜமானனை விட்டு ஓடிப்போனவன். பிலமோனுக்கு பிரயோஜனமில்லாதவன்.

Application பயன்பாடு: தேவன் பல முறை என்னிடம் வலியுறுத்திச் சொல்கிற பாடம் இதுவே. உண்மையுள்ள ஊழியக்காரனே பிரயோஜனமுள்ளவன். நான் பிரயோஜனமில்லாதவனாக இருக்கிறேன் எனில், நான் உண்மையுள்ளவனாக இருக்கவில்லை. நான் கீழ்ப்படிகிறவனாக இருக்கிறமட்டும் பிரயோஜனமுள்ளவனாக இருக்கிறேன். நான் ஜெபிக்கிறவனாக இருக்கும் வரைக்கும் பிரயோஜனமுள்ளவனாக இருக்கிறேன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, பாடவும், பேசவும் ஜெபிக்கவும் உமக்கு நான் பயன்படட்டும். எவருக்காவது உம் வழியைக் காண்பிக்க என்னை பயன்படுத்தும். உம் பட்சிக்கும் அக்கினியை உணர நான் மிகவும் வாஞ்சிக்கிறேன். உமக்கு பயனுள்ளவனாக இருப்பதே என் விருப்பம் ஆகும்” (Audrey Meier) ஆமென்.