Showing posts with label வழிநடத்துதல். Show all posts
Showing posts with label வழிநடத்துதல். Show all posts

Sunday, November 6, 2011

SOAP 4 Today - என்னைப் பற்றிய தேவனுடைய நோக்கம்

Scripture வேதவசனம்: கலாத்தியர் 4. நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,
5. காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

Observation: இயேசு ஏன் வந்தார்? அவர் ஏன் ஒரு பெண்ணிடம் பிறந்தார்? அவர் நியாயப்பிரமாணத்திற்குட்பட்டவராய் ஏன் பிறந்தார்? நம்மை மீட்கவும் நாம் தேவனுடையப் பிள்ளைகள் என்று உணரும்படிக்கு அவர் அவ்வாறு செய்தார்.

நம்மைப் பலப்படுத்தக் கூடிய இடத்தில் இயேசு நின்றார். அவர் நியாயை பிரமாணத்திற்குட்பட்டவராய் வந்து, அதை நிறைவேற்றினார். ஆனால் அதை அவர் தமக்காகச் செய்து முடிக்கவில்லை. ஏனெனில் அவர் பாவமில்லாதவராகப் பிறந்தவர், ஒரு போதும் பாவமே செய்யாதவர். அவருக்கு பாவங்களுக்காகப் பரிகாரப் பலி தேவையில்லை. ஆனால் அவர் நம் பாவங்களுக்கான பரிபூரணமான பலி ஆனார்.

பிள்ளைகள் எனும் முழு உரிமையை நாம் பெறுவதற்காக அவர் எல்லாவற்றையும் செய்தார். இதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த நிகழ்கால வாழ்க்கையில் மட்டுமல்லாது, வருங்கால வாழ்க்கையிலும் அவர் என்ன செய்ய முடியும் என்பதை யார் முழுமையாக அறிய முடியும்?


Application பயன்பாடு: இன்று நான் தேவனுடைய பிள்ளையாக இருக்கிறேன். தேவன் என்னை அவருடைய குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு, நான் இயேசுவைப் போல மாற வேண்டும் என எனக்கு இலக்கை நிர்ணயித்திருக்கிறார். நான் இக்குறிக்கோளை உணர்ந்து கொளவதற்கு இயேசு கிறிஸ்துவுக்கு இருந்தது போலவே பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் தேவை.

Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, இயேசுவைப் போல மாறுவதற்கு நீர் என்னை வழிநடத்துகிறதில், உம் சத்தத்தை இன்று கேட்க எனக்குதவும்.


Wednesday, October 26, 2011

SOAP 4 Today - வாக்குத்தத்தத்துடன் கொடுக்கப்பட்ட ஒரு வேலை

Scripture வேத வசனம்: அப்போஸ்தலர் 26: 15 அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
16. இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.
17. உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி,
18. அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.

Observation கவனித்தல் : பவுல் தான் ஆண்டவரை எப்படி சந்தித்தார் என்பதைக் குறித்து அவர் கூறுகிறார். தாம் துன்புறுத்துகிறே அதே ஆண்டவர்தாம் தமக்கு தரிசனமானதைக் குறித்து அவர் ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும். தம்மைச் சந்திக்க வந்த இயேசு பழிவாங்குவதற்காக வராமல் ஒரு வேலையைத் தருவதற்காக வந்ததைக் குறித்து அவர் அதிகம் ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும். பவுல் தான் காப்பாற்ற அவசியமில்லாத ஜனங்களிடம் அனுப்பப்பட்டார். பவுல் தானே இரட்சிக்கப்படுவதற்கு முன்பாகவே கர்த்தரிடமிருந்து மீட்கப்படுதலைக் குறித்த வாக்குத் தத்ததைப் பெற்றார்.

Application பயன்பாடு: எனக்கு பிரச்சனை இருக்கிறது என்றால் நான் கர்த்தரை விட்டு விலகி விட்டேன் என்று பொருள் அல்ல. என் வழியில் பிரச்சனை வரும்போது நான் ஆச்சரியப்படக் கூடாது. பிரச்சனை இல்லாத ஒரு வாழ்விற்கு நான் ஆண்டவரிடமிருந்து வாக்குதத்தம் பெறாமல், பிரச்சனைகளை ஜெயிப்பதற்கான வாக்குத்தத்தம் எனக்கு உண்டு. ஆன்ரே கூச் என்பவர் பாடியது போல: “ எனக்கு பிரச்சனைகளே வராதிருந்தால், தேவன் அவர்களை தீர்க்க முடியும் என்பதை அறிந்திருக்க மாட்டேன். தேவனில் உள்ள விசுவாசத்தினால் என்ன செய்ய முடியும் என்பதையும் நான் அறிந்திருக்க மாட்டேன்.”

Prayer ஜெபம்: கர்த்தாவே தேவையுள்ள ஒரு இடத்திற்கு நீர் என்னை அனுப்புவீர் எனில், என் தேவைகளைச் சந்திப்பீர். வார்த்தை தேவைப்படுகிற இடத்திற்கு நீர் என்னை அனுப்புவீர் எனில் வார்த்தயையும் நீரே தருவீர்.

Sunday, June 26, 2011

SOAP 4 Today - இதைத் தவிர வேறு வழி இல்லை

வாசிக்க: யோனா 1- 4; 2 தீமோத்தேயு 2

Scripture வேதவசனம்: யோனா 2:4 நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.

Observation கவனித்தல்: யோனா தீர்க்கதரிசி தேவன் தனக்குக் கொடுத்த வேலையைச் செய்ய விருப்பமில்லாதபடியால், அவர் விலகி ஓடினார். அவர் எதிர் திசையில் சென்ற கப்பலில் ஏறி, புயலினிமித்தம் கடலில் தூக்கி எறியப்பட்டார். கடலுக்குள்ளே அவரை ஒரு பெரிய மீன் விழுங்கும்படி தேவன் செய்தார்.

மீனின் வயிற்றில் யோனாவுக்கு நோக்கிப் பார்ப்பதற்கு தேவனைத் தவிர வேறு யாரும் இல்லை. வேறு யாரிடம் தான் தீர்க்கதரிசி திரும்பியிருக்க முடியும்? தேவன் மட்டுமே அவர் சத்தத்தைக் கேட்டு, அவனுக்கு உதவ முடியும்.

Application பயன்பாடு: உதவிக்காக மனிதர்களைப் பார்க்காமல் தேவனை நோக்கிப் பார்க்கும்போது அவர் கனப்படுத்தப்படுகிறார். எனக்கு இருக்கும் அனேக சாத்தியக் கூறுகளில் இருந்து நான் அவரைத் தெரிவு செய்து கொள்ளவில்லை எனில், யோனாவுக்குச் செய்தது போல வேறு வழியே இல்லை என்று உணரக் கூடிய நிலையை அவரால் உண்டாக்கமுடியும். அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது போன்ற சூழ்நிலையில் வைக்குமளவுக்கு அவர் என்னை நேசிக்கிறார்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் போக வேண்டுமென்று நீர் விரும்புகிற இடத்திற்கு நான் செல்வேன். அருமை ஆண்டவரே, மலையானாலும் அல்லது சமதளமானாலும் அல்லது கடலானாலும் நீர் என்னிடத்தில் என்ன சொல்ல விரும்புகிறீர் என்றே பிரிய கர்த்தாவே கேட்பேன். நான் எப்படி இருக்கவேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அவ்வண்ணமே நானும் இருப்பேன். ஆமென்.


No choice but one

Jonah 1-4; 2Timothy 2

Scripture: Jonah 2:4 I said, ‘I have been banished from your sight; yet I will look again towards your holy temple.’

Observation: The prophet did not want to take on the assignment given to Him by God so he was running away. He took a ship going the opposite direction and in a storm had been thrown into the sea where God had provided a great fish to swallow him. (Although Exploration Place , in Wichita , teaches godless evolution, they recently had a display of the jaws of a fish that would be more than large enough to swallow a man. I should thank them for their part in validating the book of Jonah.)

Now the prophet had no where else to look. To whom else could the prophet turn? Only God could hear him and only God could help him.

Application: God is honored when I choose Him above others. But if I do not choose Him out from among many possibilities He is well able to limit my choice, like Jonah, to just one! It is good that God cares enough for me to put me in situation where I have no choice but Him.

Prayer: Lord, I remember singing, “I’ll go where you want me to go, Dear Lord; o’re mountain or plain or sea. I’ll say what you want me to say dear Lord. I’ll be what you want me to be.” Lord, it is still true. Amen.

Saturday, April 17, 2010

SOAP 4 Today 8 - பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுதல்

வாசிக்க: 1 சாமுவேல் 19; 1நாளாகமம் 7; சங்கீதம் 59; மத்தேயு 4

Scripture வேத வசனம் : மத்தேயு 4:1, இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

Observation கவனித்தல் : ஆவியானவரால் நடத்தப்படுதல் - கேட்பதற்கே நன்றாக இருக்கிறது..... ஆனால் வனாந்திரத்திற்குள் - இது மோசமானதாக இருக்கிறது.... பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக.... - இது இன்னும் கொடுமையானதாக இருக்கிறது. எனினும் பரிசுத்த ஆவியானவர்தாம் இயேசுகிறிஸ்துவை அங்கே வழிநடத்தினார். இயேசு எதைக் கொண்டு வாழ்வார் என்கிற கருத்தை முன்வைப்பதற்கு இது முக்கியமான தருணமாக ஆனது. அவர் தேவ வார்த்தையைக் கொண்டு வாழ்வார். அவர் தம் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாத்திரமே பணிந்து கொள்வார். தாம்தான் தேவனுடைய தயையை பெற்றவர் என்பதை நிரூபிக்கவேண்டும் என்று அவர் தேவனை வற்புறுத்த மாட்டார்.

Application பயன்பாடு : நான் “வனாந்திர அனுபவத்தில்” இருக்கும் போது ஏதோ தவறான காரியத்தை செய்துவிட்டேன் என்று உடனே நினைக்கக் கூடாது. நான் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிற சரியான இடமாக அது இருக்கலாம். கடினமான தருணங்களுக்குள் தேவன் என்னை நடத்தியிருக்காவிடில், நான் அவற்றைப் பயன்படுத்தி எதைக் கொண்டு நான் வாழ்கிறேன் என்பதை வெளிப்படுத்த முடியும். என்னைச் சூழ்ந்திருக்கிற கஷ்டங்களில் பிசாசு ஏதாவது செய்தால், “நான் இனிமேல் இவனுக்கு இதைச் செய்ய விரும்பவே மாட்டேன்” என்று பிசாசை முடிவில் சொல்ல வைத்து நான் தேவனை மிகவும் மகிமைப்படுத்துவேன்.

Prayer ஜெபம் : பரிசுத்த ஆவியானவரே, கடினமான வேளைகளிலும் கூட நீர் என்னை நடத்துவதற்கு நான் உம்மை நம்புகிறேன். மற்றவர்கள் என்னில் உள்ள இயேசுவைக் காண இயலும்படிக்கு ஒவ்வொரு வார்த்தை மற்றும் செயலில் வழிநடத்தும். ஆமென்!

1Samuel 19; 1Chronicles 7; Psalm 59; Matthew 4

Led by the Spirit

Scripture: Matthew 4:1 Then Jesus was led by the Spirit into the desert to be tempted by the devil.

Observation: Led by the Spirit—that sounds good! …into the desert—that sounds bad. …to be tempted by the devil—that sounds even worse! Yet it was the Holy Spirit who led Jesus there! This became an important time for laying out the principles by which Jesus would live His life, i.e. He would live by the word. He would bow only to His Father God. And He would not force God to prove that He (Jesus) was the One with God’s favor.

Application: When I am in the “desert” I should not immediately think that I have done something wrong. It may be that I am exactly where God wants me. Even if God did not specifically lead me into hard times, I can take advantage of them to clearly demonstrate the principles by which I live. And if the devil had something to do with the difficulties around me, may I so glorify God that the devil ends up saying, “I never want to do that to Leon again.”

Prayer: Holy Spirit, I trust you to lead me, even if it is through tough times. Guide each word and each action so that others can see Jesus living in me. Amen.