Scripture வேத வசனம்: மத்தேயு 8: இந்த அதிகாரத்தில் பின் வரும் வார்த்தைகளை நாம் காண்கிறோம் : “சுத்தமாகு” என்று குஷ்டரோகியிடம் சொன்னார்; “நீ போகலாம்,” வியாதிப்பட்டிருந்த தன் வேலைக்காரனுக்காக வந்த நூற்றுக்கதிபதியிடம் சொன்னார் ; அவர் அசுத்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே ’துரத்தினார் ; அவர் காற்றையும் கடலையும் அதட்டினார் ; “ போங்கள்” என்று கூறி அசுத்த ஆவி பிடித்திருந்த மனிதனிடமிருந்து பிசாசுகளை துரத்தினார்.
Observation கவனித்தல்: வார்த்தைகளின் வல்லமை இரண்டு காரியங்களினை அஸ்திபாரமாக கொண்டுள்ளது : பேசுபவரின் தன்மை, இரண்டாவது கேட்பவரின் விசுவாசம். முதலாவதாக, பேசுபவரின் தன்மை நம்பப்படத்தக்கதாக இருக்கும் போது, அதை நடைபெறவைக்க அவருக்கு வல்லமை இருக்கும்போது, அந்த வார்த்தைகளுக்கு கீழ்ப்படியப்பண்ண மற்றவர்கள் மீது அதிகாரம் இருக்கும்போது - அந்த வார்த்தைகள் ஒருவேளை மனிதர்கள் நம்பாவிடினும் கூட வல்லமையானவைதான். கேட்பவர் அதை தனக்காக சொல்லப்பட்ட வார்த்தையாக எடுத்துக் கொண்டு , அவற்றை உண்மையானவை யாக எடுத்துக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கும் போது, அதைப் பேசியவரின் தன்மை கேள்விக்குட்பட்டதாக இருந்தாலும் கூட அவை வல்லமையானதாகும்.
இங்கே, பேசுபவர் தேவன், கேட்பவர் கீழ்ப்படியும் விசுவாசி. அந்த வார்த்தைகளின் வல்லமை விசுவாசியின் வாழ்க்கையில் வெளிப்படுத்தப்படுகிறது.
Application பயன்பாடு : தேவன் என்னை தம் பிள்ளையாக , மகனாக அழைத்திருக்கிறார். நான் அதை விசுவாசித்து அதன் படி செயல்படவேண்டும். மேலும், எனது வார்த்தைகள் நம்மபப்படத்தக்கவையாக இருக்கும்படிக்கு நான் பேசவும் செயல்படவும் வேண்டும்.
Prayer ஜெபம்: பிதாவே, என்னை ஏற்றுக் கொண்டு உம்முடைய மகன் என அழைப்பதற்காக நன்றி. மற்றவர்களும் நம்பும்படிக்கு நான் இன்று பேசவும் செயல்படவும் விரும்புகிறேன். ஆமென்!.
The power of HIS words
Scripture: Matthew 8: In this chapter we find the following: “Be clean,” He said to the man with leprosy; “Go,” he said to the Centurion whose daughter was ill; He cast out evil spirits “with a word;” He rebuked the storm; He sent evil spirits out of a possessed man with the word, “Go.”
Observation: The power of words is based on two things: first, the character of the one speaking, and second, the faith of those hearing. First: When the character of the speaker is believable, he has power to make it happen, and the authority to hold others accountable for those words—those words are powerful even if people do not believe them. Second: When the hearer accepts words as personal to himself and then begins acting like they are true—those words have power, even if the speaker is of questionable character.
Now, when the speaker is God, and the hearer is an obedient believer, the power of those words are released in the believer’s life!
Application: God has called me His child, His son. I must believe it and act like it! Also, I am to speak and act in ways that make my words believable.
Prayer: Father, thank you for accepting me and calling me your son. Today I want to act and speak in ways that others will believe it too. Amen.
No comments:
Post a Comment