Thursday, May 6, 2010

என்னை தேவன் எவ்வாறு நடத்த விரும்புகிறேன்?

வாசிக்க: 1சாமுவேல் 25-26; சங்கீதம் 63; மத்தேயு 9

Scripture வேதவசனம்: 1சாமுவேல்l 26:23 (தாவீது சொல்கிறான்) கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப்பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என்கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.

24. இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்.

Observation கவனித்தல் : தான் சவுலின் உயிரை அருமையாக எண்ணினது போல தனது உயிரையும் சவுல் எண்ணவேண்டும் என்று தாவீது சவுலிடம் கேட்கவில்லை. மாறாக தேவன் அவ்வாறு எண்ணவேண்டும் என்று கேட்கிறார். எவ்வளவு ஞானமான ஒரு செயல்! தேவனுடைய தயவும் பாதுகாக்கும் வல்லமையும் உலகத்திலுள்ள எந்த ராஜாவினுடையதையும் விட மிகவும் மேலானதாகும்.

Application பயன்பாடு : நான் எப்படி மற்றவர்களை நியாயந்தீர்க்கிறேனோ அது போலவே நானும் நியாயந்தீற்க்கப்படுவேன்; மற்றவர்களுக்கு நான் இரக்கப்பாராட்டுவது போலவே எனக்கும் இரக்கம் பாராட்டப்படும் என்று இஏசு போதித்தார். நான் அளக்கிற அளவின்படியே எனக்கும் அள்ளப்படுகிறது. நான் மன்னித்த அள்வின் படியே எனக்கும் மன்னிக்கப்படுகிறது. வெளிப்படையாகச் சொல்லப் போனால், தேவன் என்னை எவ்வாறு நடத்தவேண்டும் என்று விரும்புகிறேனோ அதுபோல நான் மற்றவர்களை நடத்த வேண்டும். நான் மற்றவர்களுக்கு செய்யும் நன்மைகளை அவர்கள் எனக்கு திரும்ப செய்யவேண்டும் என்று எப்பொழுதும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் தேவன் அதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்க முடியும், குறிப்பாக அவருக்காக மற்றும் அவருடைய மகிமைக்காக நான் எதையாவது செய்யும் போது இப்படி எதிர்பார்க்கலாம்.

Prayer ஜெபம் : பரிசுத்த ஆவியானவரே! தீமைக்கு நன்மையை சரிகட்டவும், பிரதிபலனை எத்ரிபாராமல் மற்றவர்களுக்கு உதவவும் எனக்கு இன்றூ உதவும். மனிதரிடமிருந்து பெறும் எந்தப் பலனைப் பார்க்கிலும் மேலானதொரு பரிசான உம்முடைய முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதே எனது பரிசாக இருக்கட்டும். ஆமென்!

1Samuel 25-26; Psalm 63; Matthew 9

How do I want God to treat me?

Scripture: 1Samuel 26:23 (David speaking) The LORD rewards every man for his righteousness and faithfulness. The LORD gave you (King Saul who was out looking for David to kill him) into my hands today, but I would not lay a hand on the LORD’s anointed.
24 As surely as I valued your life today, so may the LORD value my life and deliver me from all trouble."

Observation: David was not asking that Saul begin to value David’s life as David had valued Saul’s, but asking that God would do so. How wise! God’s favor and protective power is much greater than that of any earthly king.

Application: Jesus taught that I would be judged as I judge and shown mercy as I show mercy; I am forgiven as I forgive and receive with the same measure I give. Obviously, I should treat others the way I want GOD to treat me. I may not always expect others to repay the good I do for them, but I can always expect God to repay, especially when I do it “as unto Him” and “for His glory.”

Prayer: Holy Spirit, help me today to repay good for evil and to serve others without expecting them to repay. Let my reward be the smile on your face, a reward of much more value than any received from men. Amen.

No comments:

Post a Comment