Thursday, June 17, 2010

SOAP 4 Today 17 - தனிப்பட்ட ஒருமுன்மாதிரி

A personal example

Scripture வேத வசனம்: கொலோசெயர் 3:12 ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;

13. ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

வாசிக்க; 1இராஜாக்கள் 20,21; 2 நாளாகமம் 17; கொலோசெயர் 3.

Observation கவனித்தல் : கிறிஸ்துவின் வாழ்க்கையை தன்னுள் கொண்டவனே ஒரு உண்மை கிறிஸ்தவன். “இயேசுவின் வாழ்க்கை” யை வாழ்வது என்பது “ இயேசு இல்லாத எனது பழைய வாழ்க்கை” யிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். அந்த புதிய வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை வேதாகமம் நமக்கு போதிக்கிறது. மன்னிப்பு என்பதே முக்கியமானதொரு காரியமாகும். வேதாகமத்தில் மன்னிப்பு பல முறை குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணம் நாம் அதை அடிக்கடி அப்பியாசிக்க வேண்டிய தேவை உள்ளவர்களாக இருக்கிறோம் என்பதே.

13வது வசனம் ஒருவரை ஒருவர் மன்னிக்கவேண்டும் என்பதை கூறுகிறது. ஏன்? ஏனெனில் பரிபூரணமானவர் எவருமில்லை. பொறாமையையும் அதிருப்தியையும் காண்பிக்காமல் கசப்புணர்வடையாமல் இருப்பதே மன்னிப்பதில் சிறந்தவராகுவதற்கான வழி ஆகும். என்ன செய்யவேண்டும் என்பது சொல்லப்படுவதையா அல்லது என்ன செய்யவேண்டும் என்பதை காண்பிக்கப்படுவதையா? எதை நீங்கள் விரும்புவீர்கள்? மன்னிப்பதற்கு நமது முன் மாதிரி யார்? இந்த முன் மாதிரி எவ்வளவு த்னிப்பட்டதாக (உங்களூடன் தொடர்புடையதாக) இருக்கிறது பாருங்கள்!!! “ தேவன் தாவீதை மன்னித்தது போல ”அல்ல, “ பவுலை தேவன் மன்னித்தது போல” அல்ல, ஆனால் “ தேவன் உங்களை மன்னித்தது போல”

Application பயன்பாடு : மன்னித்தலும் மறத்தலும் வித்தியாசமான இரு காரியங்கள் ஆகும். மன்னித்தல் என்பது ஒரு தெரிவு ஆகும்; மறத்தல் என்பது ஒரு செயல்முறை ஆகும் . மன்னித்தலை நான் தெரிந்து கொள்ளும்போது, எனக்கெதிரான அந்தக் காரியத்தைக் குறித்த என் மனத்ிலுள்ள படத்தில் நான் “மன்னிக்கப்பட்டது” என்ற அடையாளத்தை வைக்கிறேன். இப்படியாக, நான் அதை நினைக்கும்போது, அது மன்னிக்கப்pபட்டது என்றூ நினைவுபடுத்திக்கொள்கிறேன். அது எப்பொழுதெல்லாம் என மனதில் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அது மன்னிக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள நான் ஒரு் உறுதி எடுக்கிறேன். எனது செயல்களை எனக்கெதிராக நட்ந்த காரியத்துடன் தொடர்புபடுத்தாமல் மன்னிப்புடன் இணைத்து பாaர்க்க உறுதி எடுக்கிறேன்.

Prayer ஜெபம்: ஆண்டவரே, நாங்கள் மற்றவர்களுக்கு மன்னிக்கிறது போல எங்கள் மீறுதல்களை எங்களுக்க்கு மன்னியும் “ என்று ஜெபிக்க நீர் கற்றுதந்தீர். ” எனது மன்னிக்க முடியாத தன்மை உமது மன்னிப்பிற்கு த்டையாக இருப்பதை ஒருபோதும் விரும்பவில்லை. ஆமென்.


1Kings 20-21; 2Chronicles 17; Colossians 3

A personal example

Scripture: Colossians 3:12 Therefore, as God’s chosen people, holy and dearly loved…
13 Bear with each other and forgive whatever grievances you may have against one another. Forgive as the Lord forgave you.

Observation: A true Christian is a person who has the Life of Jesus alive on the inside. Living the “Jesus life” is quite different from my “old life without Jesus” and the Bible gives instructions on how we are to express that new life. A key issue is forgiveness. Surely the reason it is mentioned so many times in the Bible is because we will need to apply it so often.

Verse 13 tells us to put up with one another. Why? Because no one is yet perfect. The way not to hold a grudge and become bitter is to be a good forgiver!

Would you rather be told what to do, or shown what to do? Who is our example for forgiveness? And note how personal this example is!!! Not "as the Lord forgave David," Not "as the Lord forgave Paul," But "as the Lord forgave you!"

Application: Forgiving and forgetting are two different things. Forgiving is a choice; forgetting is a process. When I choose to forgive, I put up a “Forgiven” sign across the picture in my mind of that offence. In that way, when I remember it, I remember it forgiven. I make a commitment to remind myself that it is forgiven whenever it comes to mind. I make a commitment to align my actions, not with the offence, but with the forgiveness.

Prayer: Lord, you taught us to pray, “forgive us our trespasses as we forgive those who trespass against us.” I do not want your forgiveness to ever be hindered by my un-forgiveness. Amen.

No comments:

Post a Comment