வாசிக்க: ஆமோஸ் 7-9; சங்கீதம் 104: தீத்து 2
Scripture வேதவசனம்: சங்கீதம்.104: 33 நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
34. நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.
Observation கவனித்தல்: தேவனுடைய சிருஸ்டிப்பு மற்றும் தேவன் எவ்வாறு தம் கிரியைகள் அனைத்திலும் களிகூர முடியும் என்பதைப் பற்றி ஏறக்குறைய 30 வசனங்களில் கூறியபின் சங்கீதக்காரன் தேஅனுடைய சிருஷ்டிப்பில் தலை சிறந்த மனிதனைக் குறித்து எழுதுகிறார். மற்ற அனைத்து சிருஷ்டிகளிடமிருந்தும் தேவன் மகிமையைப் பெறக்கூடும் எனில், அவர் எவ்வளவு அதிகமாக மனிதனிடமிருந்து மகிமை பெறவேண்டும்.
ஆகவே, சங்கீதக்காரன் அவரைப் பாடவும் துதிக்கவும் செய்ய ஆரம்பிக்கிறார். அவருடைய விருப்பங்களும் மனதின் யோசனைகளும் கூட தேவனுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்க விரும்புகிறார்.
Application பயன்பாடு: எனக்கு மகிழ்ச்சியளிப்பவை, நான் செய்தவை மற்றும் நான் செய்யவிரும்புகிறவை ஆகியவற்றைக் குறித்தே நான் பெரும்பாலும் சிந்திக்க விரும்புகிறேன். ஆனால் நான் தேவனை மகிழச் செய்கிறவைகளைக் குறித்து சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் என் வாழ்க்கையில் பங்கு கொண்டு என் அனைத்து எண்ணங்களையும் அறிந்திருக்கிறார்.
Prayer: கர்த்தாவே, உம்முடைய சிந்தனைகளை எனக்குரியவற்றில் இன்று கலந்து மகிழ்வீராக. ஆமென்!
Meditation
Amos 7-9; Psalm 104: Titus 2
Scripture: Psalm 104: 33 I will sing to the LORD all my life;
I will sing praise to my God as long as I live.
34 May my meditation be pleasing to him,
as I rejoice in the LORD.
Observation: After about thirty verses of God’s creation and how the Lord can rejoice in all his works, the writer now comes to God’s crowning creation: man. If God can get glory from all the other creation, how much more should He get glory from man!
So, the writer is going to sing; he is going to praise; and his desire is that even the thoughts in his mind be enjoyable to God.
Application: Usually I want to think about what I enjoy, about what I have done, or would like to be doing. But I should think about things that He enjoys. After all, He shares my life and knows my every thought.
Prayer: Lord, may you enjoy mixing your thoughts with mine today. Amen.
No comments:
Post a Comment