Sunday, June 19, 2011

SOAP 4 Today - உன்னிடத்தில் என்ன இருக்கிறது?

வாசிக்க: 2இராஜாக்கள் 4; ,5; சங்கீதம் 83, 1தீமோத்தேயு:2.

Scripture வேத வசனம்: 2இராஜாக்கள் 4: 1. தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்.
2. எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.

Observation கவனித்தல் : முடிந்தளவுக்கு காலி பாத்திரங்களை வாங்கி வைக்குமாறு எலிசா கூறினார். இரவலாக வாங்கப்பட்ட அந்தப் பாத்திரங்கள் எல்லாம் அற்புதமாக ந்ரம்பி வழியுமளவும் எண்ணெயால் நிரப்பப்பட்டது. அந்த எண்ணெய் கடனைத் தீர்ப்பதற்கும், மீதம் வாழ்க்கைக்குப் போதுமானதுமாக இருந்தது.

கவனிக்க: அந்த அற்புதம் அவளிடத்தில் இருந்த எண்ணெயில் இருந்தே ஆரம்பித்தது. இயேசு ஒரு சிறுபையனின் உணவைக் கொண்டு ஐயாயிரம் பேரைப் போஷித்தது போல, இந்த அற்புதமும் அவள் வைத்திருந்த எண்ணெயைக் கொண்டே நடக்க ஆரம்பித்தது. அவள் கீழ்ப்படிந்தபோது, தேவையான அளவும், அதற்கும் மேலாக அபரிதமாகப் பெற்றுக்கொண்டாள்.


Application பயன்பாடு : எனது தேவைகளைச் சந்திப்பதற்கு என்னிடத்திலிருப்பவற்றைக் கொண்டு நான் தேவனுக்குக் கீழ்ப்படிவதிலிருந்து ஆரம்பிக்கிறது. என்னிடத்தில் இருப்பவை + என் கீழ்ப்படிதல் = போதுமான அளவுக்கு ஆசீர்வாதம் தருகிறது.

Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய ஆசீர்வாதங்களில் பல எனது கீழ்ப்படிதலுக்கேற்றவாறே எனக்கு வாக்களிக்கப்ப்ட்டிருக்கிறது. நான் உமக்கு எவ்வளவு உண்மையுள்ளவனாயிருக்கிறேன் என்பதே நீர் எனக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறீர் என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது. ஆமென்.

It starts with what I have.

2Kings 4,5; Psalm 83; 1Timothy 2

Scripture: 2Kings 4:1 The wife of a man from the company of the prophets cried out to Elisha, "Your servant my husband is dead, and you know that he revered the LORD. But now his creditor is coming to take my two boys as his slaves."
2 Elisha replied to her, "How can I help you? Tell me, what do you have in your house?" "Your servant has nothing there at all," she said, "except a little oil."
Observation: Elisha then told her to borrow as many empty jars as were available. The jars were then filled with the oil that miraculously continued flowing until they were all filled. The oil was sold for enough to cover the debt with extra on which they could live.

NOTE: The miracle started with what she had! As Jesus started with a young boys lunch in feeding the 5000, this miracle started with the oil she had. When she was obedient, what she had became enough, even more than enough!

Application: Trusting God to meet my needs starts with my being obedient with what I already have! What I have + my obedience = sufficient supply.

Prayer: Lord, many of your promises to me are conditioned on my obedience. In those cases, your faithfulness to me is conditional on my faithfulness to you. Amen.

No comments:

Post a Comment