Scripture வேதவசனம்: யூதா.24 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
25. தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
Observation கவனித்தல்: யூதா வேறு ஏதோ ஒன்றை எழுத நினைத்திருந்தார். ஆனால் உலகத்தைல் அவரைச் சுற்றி நடந்து கொண்டிருயிருவைகளைப் பார்த்தபோது, தன் நிருபம் விசுவாசிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் வகையில் எழுதுவது தன் கடமை என உணர்ந்தார். முதல் 19 வசனங்களில் சபைக்குள் மெல்ல அடியெடுத்து வைக்கும் உலக துன்மார்க்கத்தைப் பற்றி குறீபிடுகிறார். 20முதல் 23 ஆம் வசனங்களில் விசுவாசிகளின் பொறுப்பைக் குறித்து எழுதி, அவர்கள் தீமைக்கு விலகி இருப்பதற்கு சில வழிகாட்டுதல்களைத் தருகிறார். அவர் தன் சிறிய நிருபத்தை மேலே கண்ட வசனத்தோடு முடிக்கிறார். ஜெபிப்பதும், அவருடைய அன்பில் நிலைத்திருப்பதும் மற்றும் மற்றவர்களுக்கும் போதிப்பது ஆகிய நாம் செய்ய வேண்டியவைகளைச் செய்யும்போது, தேவன் நம்மை மிகுந்த மகிழ்ச்சியோடு அவருடைய சந்நிதானத்தில் நம்மை நிறுத்துவார் என்பதைக் குறித்து நாம் உறுதியாய் இருக்க முடியும்.
Application பயன்பாடு: மிகுந்த மகிழ்ச்சியோடே தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிறுத்தப்படுவது, எவ்வளவு சிறப்பான நாளாக இருக்கும்? நான் நிறுத்தப்படுவதைக் குறித்த எனது மகிழ்ச்சி மாத்திரமல்ல, என்னை தேவனுக்கு முன்கொண்டு போய் நிறுத்துபவரின் மிகுந்த மகிழ்ச்சியான நாளாகவும் இருக்கும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே,நான் உமக்கு முன்பாக நிற்கும்போது, என் இருதயமும் உம் இதயமும் மிகுந்த மகிழ்ச்சியினால் நிரப்பப்படுவதாக. ஆமென்.
No comments:
Post a Comment