Scripture வேதவசனம்: 10 என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
11. பிலமோன் முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.
12. அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன், என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.
Observation கவனித்தல்: இந்தச் சிறிய நிருபத்தை வாசிக்கும் போது , தங்கள் பெயருக்குப் பொருத்தமான வாழ்க்கை வாழாத நபர்கள் உண்டு என்று எண்ணுகிறேன். ஒநேசிமு என்ற பெயர் ஒரு வேலையாளுக்குச் சரியான பெயராக இருக்கும். ஏனெனில் ஒநேசிமு என்பதற்கு “ பயனுள்ளவன்” என்று பொருள். ஆனால் இந்த் ஒநேசிமு தன் எஜமானனை விட்டு ஓடிப்போனவன். பிலமோனுக்கு பிரயோஜனமில்லாதவன்.
Application பயன்பாடு: தேவன் பல முறை என்னிடம் வலியுறுத்திச் சொல்கிற பாடம் இதுவே. உண்மையுள்ள ஊழியக்காரனே பிரயோஜனமுள்ளவன். நான் பிரயோஜனமில்லாதவனாக இருக்கிறேன் எனில், நான் உண்மையுள்ளவனாக இருக்கவில்லை. நான் கீழ்ப்படிகிறவனாக இருக்கிறமட்டும் பிரயோஜனமுள்ளவனாக இருக்கிறேன். நான் ஜெபிக்கிறவனாக இருக்கும் வரைக்கும் பிரயோஜனமுள்ளவனாக இருக்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, பாடவும், பேசவும் ஜெபிக்கவும் உமக்கு நான் பயன்படட்டும். எவருக்காவது உம் வழியைக் காண்பிக்க என்னை பயன்படுத்தும். உம் பட்சிக்கும் அக்கினியை உணர நான் மிகவும் வாஞ்சிக்கிறேன். உமக்கு பயனுள்ளவனாக இருப்பதே என் விருப்பம் ஆகும்” (Audrey Meier) ஆமென்.
No comments:
Post a Comment