Scripture வேதவசனம்: 2 இராஜாக்கள் 18: 5. அவன் (எசேக்கியா) இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 6. அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். 7. ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று.
Observation கவனித்தல்: மேலே கண்ட வேதபகுதியை வாசிக்கையில், நான் செய்கிற எந்தக் காரியத்திலும் வெற்றிபெறுகிறவனாக எசேக்கியா ராஜாவைப் போல இருக்க விரும்புகிறேன். ஒரு படி பின்னோக்கிச் சென்று பார்க்குங்கால் அவனுடைய வெற்றிக்கான காரணத்தைக் கண்டுகொள்கிறேன்: “கர்த்தர் அவனோடிருந்தார்” இன்னுமொரு படி பின்னோக்கிச் சென்று பார்த்தால், தேவன் ஏன் எசேக்கியாவோடு இருந்தான் என்பதற்கான காரணத்தை கண்டுகொள்ளலாம்: “ எசேக்கியா கர்த்தரைச் சார்ந்திருந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டான்” . தேவன் எசேக்கியாவோடு கூட இருந்து அவனை வெற்றிபெறுகிறவனாக வைக்க விரும்பியதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. நான் வெற்றிபெறுகிறவனாக இருக்கவேண்டும் என்று விரும்பினால், நான் செல்ல வேண்டிய ஆரம்பப் புள்ளியும் இதுவே.
Application பயன்பாடு: நான் வெற்றிபெற தேஅன் எனக்குதவும்படியான ஒரு வாழ்க்கையை நான் வாழ விரும்புகிறேன். அவர் எனக்குள் வாசம் பண்ணுகிறபடியால், என் வாழ்க்கைக்குள் காணப்படுகிற ( என் இதயம், விருப்பங்கள், மனப்பான்மைகள் மற்றும் சிந்தனைகள்) காரியங்களும் அவருக்கு ஏற்புடையதாக இருக்க விரும்புகிறேன்.
Prayer ஜெபம்: என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. (சங்கீதம் 19:14) ஆமென்.
No comments:
Post a Comment