Saturday, July 16, 2011

நாவை அடக்குதல்

வாசிக்க: ஏசாயா 29-31; யாக்கோபு 1.

Scripture வேதவசனம்: யாக்கோபு 1:26 உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். 27. திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

Observation கவனித்தல்: நான் விசுவாசத்தினால் இரட்சிக்கபட்டிருக்கிறேன். ஆனால் விசுவாசனது கிரியைகளினால் என் வாழ்வில் வெளிப்படுத்தப்பட முடியாதபடிக்கு பலமற்று இருக்குமானால், அது செத்ததும் இரட்சிக்க மாட்டாததுமான விசுவாசம் ஆகும். விசுவாசம் அதிகம் வெளிப்படுகிற வாயில் என் வாய் ஆகும். இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கை செய்வது விசுவாசத்தின் முதல் படி ஆகும். ஆனால் அத்துடன் அது நின்று விடுவதில்லை. அன்பான வார்த்தைகள் மற்றும் நாம் மற்றவர்களிடம் கனிவாக இருத்தல் மூலமாகவும் விசுவாசம் தன் இருப்பை வெளிப்படுத்துகிறது. ஜனங்கள் என் வாழ்க்கையைக் காணக் கூடிய ஜன்னலாக என் வார்த்தைகள் இருக்கிறது.

Application பயன்பாடு: என் மனதில் பட்டதைக் சொல்லுகிறேன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வதற்குப் பதிலாக, என் நாவை அடக்கியாள நான் கற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய எண்ணங்களை என் நாவு பேசவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

Prayer: கர்த்தாவே, என் நாவு உமக்கு ஊழியம் செய்ய விரும்புகிறேன். என் நாவை உம்முடைய சத்தியத்தையும் அன்பையும் வெளிப்படுத்துகிற ஒரு கருவியாக நீர் பயன்படுத்த விரும்புகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment