Scripture வேதவசனம்: 1பேதுரு 1:7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்....
9. உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.
Observation கவனித்தல்: விசுவாசம் என் வாழ்வில் ஒரு அற்புதமான பங்கை வகிக்கிறது. நான் என் விசுவாசத்தின்படி செயல்படுகிறேன். என் விசுவாசத்திற்கான அஸ்திபாரம் தேவனுடைய வார்த்தை ஆகும். தேவனுடைய வார்த்தையில் உள்ள என் விசுவாசத்திற்கான அஸ்திபாரம் தேவனின் குணாதிசயம் ஆகும். அவர் எப்பொழுதும் உண்மையுள்ளவராகவும், நம்பத்தக்கவராகவும் இருக்கிறார்.
Application பயன்பாடு: என் அனுதின வாழ்வில் நான் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் தேவைகளுக்கு என் விசுவாசத்தைப் பயன்படுத்த தடுமாறும் போது, என் விசுவாசத்தின் இலக்கு என் ஆத்தும இரட்சிப்பே என்பதை நான் மறந்து விடக் கூடாது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் இருதயத்தில் இப்பாடல் தொனித்துக் கொண்டே இருக்கிறது: “ என் ஆத்துமாவை இரட்சித்ததற்காக நன்றி; என்னை சுகமாக்கியதற்காக நன்றி; உம் மா பெரிய இரட்சிப்பை இலவசமாகவும் அபரிதமாகவும் எனக்குத் தந்ததற்காக நன்றி கர்த்தாவே. ஆமென்.”
No comments:
Post a Comment