Monday, August 22, 2011

தேவன் மீது உள்ள என் அன்பு

வாசிக்க: எரேமியா 31-32; 1 யோவான் 4

Scripture வேதவசனம்: 1யோவான் 4:10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
11. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.

Observation கவனித்தல்: தேவன் தம் குமாரனாகிய இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினதினாலே அவருடைய அன்பு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் தேவனை அதற்காக திரும்ப நேசிப்பதோடு நின்று விடாமல் நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களை அன்பு செய்வதில் நம் அன்பை வெளிப்படுத்தவேண்டும்.

நாம் திரும்ப நம் அன்பை செலுத்த இயலுவதற்கு முன்பே தேவன் நம் மீது வைத்த அன்பு நிரூபிக்கப்பட்டு விட்டது. ஏற்றுகொள்ளப்படமல் புறக்கணிக்கப்படும் அபாயத்தை அவர் நம் மீது வைத்த அன்பு எடுத்துப் போட்டுவிட்டது. நாம் அவரை நேசிப்பதற்கு முன்பாகவே அவர் நம்மை நேசித்துவிட்டார் என்பதை நாம் உறுதியாக அறிந்திருக்கிறோம்.

தேவனைப் போல நேசிப்பது என்பது நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பே அவர்களை நாம் நேசிக்கச் செய்கிறது.

Application பயன்பாடு: தேவன் என் மீது வைத்த அன்பிற்கு நிரூபணமாக இயேசுவை அவர் உலகிற்கு அனுப்பினார். நான் தேவனை நேசிப்பதற்கு நிரூபணமாக என்னைச் சுற்றிலுமுள்ளவர்களை நேசிப்பது உள்ளது. நான் பார்க்கக் கூடிய மனிதர்களை நேசிப்பது காணாத தேவனை நேசிப்பதற்குச் சான்றாக உள்ளது.

Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் மீதான என் அன்பு பார்க்கக் கூடியதாக இருக்க விரும்புகிறேன். என்னைச் சுற்றிலும் உள்ளவர்களை நான் நேசிப்பதில் அது பார்க்கக் கூடியதாக இருப்பதாக. ஆமென்.

No comments:

Post a Comment