Friday, August 19, 2011

இயேசு என்ன செய்திருப்பார்

வாசிக்க: எரேமியா 21,24,27; சங்கீதம் 118; 1 யோவான் 2.

Scripture வசனம்: 1யோவான் 2:3 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.
4. அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
5. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
6. அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

Observation கவனித்தல்: நம்பேச்சில் அல்ல, மாறாக நாம் சொன்ன பின்பு செய்யும் செயல்களிலேயே நிரூபணச் சான்று உள்ளது. நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்வோம் எனில், இயேசு வாழ்ந்தது போல நாமும் வாழ வேண்டும்.

நம்மைக் குறித்த பரலோக நோக்கம் நிறைவேறும் பொருட்டு இயேசு எப்படி வாழ்ந்தார் என்பதை வேதாகமத்தின் நான்கு புத்தகங்களில் நாம் காணலாம். நாம் அதை நற்செய்தி நூல்கள் என்கிறோம்: மத்தேயு மாற்கு, லூக்கா மற்றும் யோவான் எழுதிய நற்செய்தி நூல்கள்.

நாம் இவ்வுலகில் எப்படி வாழவேண்டும் என்பதை நன்கு புரிந்து கொள்ளும்படியாக நற்செய்தி நூல்களை அனுதினமும் வாசிப்பது நம் நோக்கமாக இருக்கவேண்டும்.

Application கவனித்தல்: இயேசு உலகில் வாழ்ந்த நாட்களின் வரலாறைக் நற்செய்தி நூல்கள் மிகவும் அதிகமாக எடுத்துக் கூறுகின்றன. நான் இவ்வுலகில் எப்படி வாழவேண்டும் என்பதற்கான கையேடாக அவை இருக்கின்றன. உண்மையைச் சொல்வதானால், நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கவேண்டுமெனில், இயேசு எவ்வாறு வாழ்ந்திருப்பார் என்பதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

Prayer ஜெபம்: பரிசுத்த தேவனே, நான் இந்த நாளில், நற்செய்தி நூலில் வாசித்ததை நினைவுபடுத்தி அதன்படி வாழ எனக்கு உதவும். இயேசுவின் வாழ்க்கையை என் முன் மாதிரியாக வைக்க விரும்புகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment