Scripture வேதவசனம்: லூக்கா 6:31 Dமனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
37. மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
38. கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.
Observation கவனித்தல்: 31ம் வசனம் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வசனம் ஆகும். 31ம் வசனத்தின்படி நாம் வாழ்வது எப்படி என்ற குறிப்பை அதைத் தொடர்ந்து வரும் வசனங்கள் தருகின்றன. மற்றவர்கள் எப்படி என்னை நடத்த வேண்டும் என்பதை விட நான் மற்றவர்களை எப்படி நடத்தவேண்டு என்பதற்கான எச்சரிப்பை 37.38 வசனங்களில் நான் கவனிக்கிறேன்.
Application பயன்பாடு: என் வாழ்வில் வரும் பிரச்சனைக்கு மற்றவர்களை குறைகூறும்படி வேதம் கூறவில்லை. எல்லாவற்றையும் முதலாவதாக நான் சரியாகச் செய்யும்படி அதற்கான பொறுப்பை எனக்கு வேதாகமம் தருகிறது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, எனக்கு மற்றவர்கள் செய்தவற்றிற்கு நான் பதிலடி கொடுக்கும் வண்ணம் என் செயல் இருக்காமல், நீர் எனக்காக செய்தவற்றிற்கு நான் திரும்பச் செலுத்தும் வண்ணமாக என் செயல் இருக்க விரும்புகிறேன். எனக்கு நன்மை செய்வதற்கான முயற்சியை நீர் ஆரம்பித்தீர், நானும் மற்றவர்களுக்கு நன்மை செய்யும்படி எனக்குதவும். ஆமென்.
No comments:
Post a Comment