Scripture வேதவசனம்: எஸ்றா 3: 10 சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.
Observation: யூதேயாவில் மீட்சியும் திரும்பக் கட்டபடுதலும் நடைபெறும்போதெல்லாம் அவர்கள் தாவீதின் வழிக்குத் திரும்பினார்கள் என்று வேதாகமம் குறிப்பிடுகிறதைக் கவனித்திருக்கிறேன். அவர்கள் தாவீதின் ஆட்சிமுறைக்கோ அல்லது கட்டிட முறைக்கோ அல்லது அவனது நிர்வாகமுறைக்கோ அல்லது அவனது உடை உடுத்தும் விதத்துக்கோ திரும்பாமல் அவன் தேவனை ஆராதித்த முறைக்கு திரும்பினார்கள்.
Application பயன்பாடு: நான் செய்யும் ஆராதனை தேவனுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர் அதற்கு பாத்திரராயிருக்கிறார். கட்டாயப்படுத்தப்பட்டு ஆராதிப்பவர்களை விட தேவனை ஆராதிப்பது சரியான காரியம் என்றுணர்ந்து அவரை ஆராதிப்பவர்கள் செய்யும் ஆராதனையையே அவர் விரும்புகிறார்.
நான் என் மீது என் கண்களை வைக்காமல், நான் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளைக் காட்டிலும் பெரியவரான, அளவிலாமல் என்னை நேசிக்கிற தேவன் மீது என் கண்களை வைக்கும்படிக்கு நான் செய்யும் ஆராதனை உதவுகிறபடியால் எனக்கு அது முக்கியமானது ஆகும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, ஆராதனை இல்லாத வாழ்க்கை உமக்கு ஏமாற்றத்தையும் எனக்கு வீணானதாகவும் இருக்கிறது. நீர் ஆராதிப்பவர்களைத் தேடுகிறீர் என யோவான்4:23 கூறுகிறது. நான் உமக்கு முன்பாக ஆராதிப்பவராக இருக்க உதவும். ஆமென்.
No comments:
Post a Comment