Monday, September 26, 2011

SOAP 4 Today - அனுப்பப் பட விருப்பம்

வாசிக்க வேண்டிய வேதபகுதி: ஆகாய் 1,2; சங்கீதம் 129; லூக்கா 10.

Scripture வேதவசனம்: லூக்கா 10:2 அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
3. புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்

Observation கவனித்தல்: அவர்கள் அறுவடையைக் குறித்த அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டியதாயிருந்தது. விளைநிலம் அறுப்புக்குத் தயாராக இருப்பதைக் காண்பது தேவன் தேவைப்படும் ஜனங்களைக் குறித்து ஒரு சித்திரமாக இருக்கிறது.

அவர்கள் அறுவடையைக் குறித்த அறிவுடையவர்களாக மாத்திரம் இல்லாமல், அதற்காக ஜெபிக்கவும் செய்யவேண்டியதாயிருந்தது. வேலையாட்களுக்காக அவர்கள் குறிப்பாக ஜெபிக்க வேண்டியதிருந்தது.

அவர்கள் அறுவடையைக் குறித்து அறிந்து ஜெபிப்பதோடல்லாமல், அவர்கள் புறப்பட்டு போகவும் வேண்டியதாயிருந்தது. தங்கள் சொந்த ஜெபங்களுக்கு பதிகளாக அவர்களே மாறினார்கள்.

Application: ஒருவருடைய இரட்சிப்பைக் குறித்து நான் அக்கறையுடையவனாக ஆகும்போது, அவர்களுக்காக ஜெபிப்பது எனக்கு விசித்திரமானது அல்ல. சில்வேளைகளில் அவர்களிடம் பேசும்படி யாரையாவது அனுப்பும் என்று குறிப்பாக ஜெபிப்பதுண்டு. ஏற்கனவே இயேசுவை அனுப்பிவிட்டீர் என்பதை நான் நினைவுகூர உதவும். ஆகவே இப்போது அந்த ஜெபங்களுக்குப் பதில்களாக நானே அனுப்பப்படும்படி நான் விருப்பமுடையவனாக இருக்கிறேன்.

Prayer: பிதாவே, அறுவடையின் ஆண்டவரே, நீர் ஏற்கனவே உம் மகனாகிய இயேசுவை இரட்சிப்பை அருளும்படி அனுப்பியிருக்கிறீர். நான் ஜெபிக்கிறவர்களுக்காக அவரைப் போல அனுப்பப்படும்படி நான் விருப்பமுடையவனாக இருக்க உதவும். ஆமென்.

1 comment:

  1. மிகவும் பிரயோஜனமாக இருந்தது நன்றி சகோதரரே....

    ReplyDelete