Monday, October 3, 2011

SOAP 4 Today - அடக்கடவுளே (OMG)

வாசிக்க வேண்டிய வேதபகுதி: எஸ்றா 5,6; சங்கீதம் 138, லூக்கா 16.

Scripture வேதவசனம்: சங்கீதம்138:2 உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

Observation கவனித்தல்: ஒருவருடைய வார்த்தைக்கு மதிப்பு அதற்கு மற்றவர்கள் கொடுக்கும் மதிப்பிலேயே இருக்கிறது. தேவன் தம் வார்த்தைக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார். தேவன் தம் வார்த்தைக்கு மதிப்புகொடுக்கிற படியால், நாமும் அவருடைய வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். தேவன் தம்முடைய நாமத்திற்கும் அதிக மதிப்பு கொடுக்கிறார். மூன்றாம் கற்பனை இதை வலியுறுத்துகிறது.

OMG(அடக்கடவுளே) என்ற இந்த பதத்தை முகநூல் இணையதளம் பிரபலப்படுத்தியிருக்கிறது என்று நம்புகிறேன். ’உன் கடவுள் யார்’ என்று கேட்கும்போது வெளிப்படும் வெறுமையான முகத் தோற்றத்திலிருந்து அவர்களுக்கு அதைக்குறித்து எதுவுமே தெரியாது என்று அறிந்து கொள்கிறேன்


Application பயன்பாடு: என் வாயிலிருந்து புறப்படும் அர்த்தமற்ற வார்த்தைகளைக்குறித்து நான் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நான் என் மனதையும் வாயையும் தேவனுடைய வார்த்தைகளால் நிரப்ப வேண்டும். நான் தேவனைக் குறித்து பேசுவதை மற்றவர்கள் கேட்கும்போது, நான் எந்தளவுக்கு அவரை கனப்படுத்துகிறேன் என்றும், மதிக்கிறேன் என்றும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

Prayer: கர்த்தாவே, உம்முடைய நாமமும், உம் வார்த்தையும் என் வார்த்தைகளில் உயர்த்தப்படட்டும். ஆமென்.

No comments:

Post a Comment