Wednesday, October 5, 2011

Soap4Today - இயேசுவைப் போல

வாசிக்க வேண்டிய வேத ப்குதி: எஸ்தர் 9, 10; லூக்கா 19.

இயேசுவைப் போல

Scripture வேதவசனம்: லூக்கா 19:10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

Observation கவனித்தல்: இயேசு தம்மை ‘ஆபிரகாமின் மகன்” என்று சொல்லி ஒரு யூதராகக் காண்பித்திருக்கலாம். தன்னை “தாவீதின் மகன்” என்று சொல்லி அரச பரம்பரையில் வந்தவர் என்று பெருமையுடன் சொல்லியிருக்கலாம். “தேவ குமாரன்” என்று தன்னைக் குறித்த உண்மையைக் கூறியிருக்கலாம். ஆனால், இயேசு தன்னைத் தாழ்த்தி திரும்பத் திரும்ப “மனுஷக் குமாரன்” என்றூ சொன்னார். யாருக்காக அவர் இந்த பூமிக்கு ஊழியம் செய்ய வந்தாரோ, அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

Application பயன்பாடு: நான் ஊழியம் செய்கிற அல்லது அனுப்பப்பட்ட இடத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் மேலானவனோ அல்லது அதிக மதிப்புள்ளவனோ அல்ல.

Prayer ஜெபம்: கர்த்தாவே, இன்று நான் உமக்கு முன்பாகவும் என்னைச் சுற்றிலும் இருக்கிறவர்கள் முன்பாகவும் மனத்தாழ்மையுடன் நடந்து கொள்ள உதவும்.

No comments:

Post a Comment