Sunday, October 23, 2011

SOAP 4 Today - தேவன் என் தேவைகளை அறிந்திருக்கிறார்

Scripture வேத வசனம்: Acts 19:1 அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:
2. நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.

Observation: 'இயேசுவைப் போல 'ப்வுலும் முக்கியத்துவம் கொடுக்கிறதைக் கவனிக்கிறேன். உலகமெங்கும் போய் சுவிசேசத்தைப் பி'ரசங்கிக்க வேண்டும் என இயேசு தம் சீடர்களுக்குக் கட்டளை கொடுத்தார். ஆனால் பரிசுத்த ஆவியானவரைப் பெ'றும் வரைக்கும் எங்கும் போகக் கூடாது என அவர் போவதற்கு முன்பு சொல்லிவிட்டுச் சென்றர். இங்கே எபேசுவிலுள்ள விசுவாசிகளைக் குறித்த பவுலின் அக்கறையைக் காண்கிறோம்.

Application பயன்டுபாடு: தேவன் என் பலம் மற்றும் ஞானத்தைச் சார்ந்திருப்பதில்லை என்பதை திரும்பத் திரும்ப நான் காண்கிறேன். அவருடைய உதவியில்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை அவர் முன்னமே அறிந்திருக்கிறார் (யோவான்15:5). அவருடன் இணைந்து நான் அனைத்தையும் செய்ய முடியும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார் (எபேசியர் 4:13)

Prayer: பரிசுத்த ஆவியானவரே, பரம தந்தை எனக்கு இன்று வைத்திருக்கும் சித்தத்தை நான் செய்து முடிக்கவேண்டும் எனில், நீ என்னுடன் இருக்க வேண்டும். என்னுடன் பேச வேண்டும். என் மூலமாக மற்றவர்களைத் தொட வேண்டும். ஆமென்.

No comments:

Post a Comment