Sunday, October 9, 2011

SOAP 4 Today - உரிமையாளர் கையேடு

Scripture வேத வசனம்: லூக்கா.22:9 அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்.

Observation கவனித்தல்: இயேசுவை எப்படிப் பிடிக்கலாம் என வகைதேடிக் கொண்டிருந்தவர்கள் எப்போதும் இருந்தனர். வாழ்க்கை என்பது தங்களுக்கே சொந்தமானது, பின்பற்றும்படி விதிமுறைகளை வகுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை என்று நினைத்தனர். குறிப்பாக, அவர்களால் காணமுடியாத இறைவனைக் காணவும், அவர்கள் வாழ விரும்புவதற்கு எதிராகவும் யாரும் எதுவும் சொல்லக் கூடாதென அவர்கள் நினைத்தனர். அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தேவன் சில வழிகாட்டுதல்களை வைத்திருப்பார் என்பது அவர்களுக்கு இடறலாக இருந்தது. புதைகுழியில் விழுந்து கழுத்து வரை அமிழ்ந்த பின்னரே இயேசுவோடு இருப்பது நல்லது என நினைக்கிறார்கள்.

Application பயன்பாடு: நான் ஒரு புதிய காரை வாங்கும் போது அக்காருக்கான உரிமையாளர் கையேட்டை அதற்குரிய இடத்தில் வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எங்கள் வீட்டில் இது போன்ற பலவிதமான சிறப்பு பொருட்களுக்கான உரிமையாளர் கையேட்டை வைப்பதெற்கென்றே ஒரு விசேசமான இடம் வைத்திருக்கிறோம்.

மனிதன் ஒரு வாகனத்தை விட அல்லது வாஷிங் மெஷினை விட மிகவும் சிக்கலான அமைப்பை உடையவன். ஒரு உரிமையாளை கையேட்டைத் தருவது தேவனின் அளவற்ற ஞானமல்லவா! வடிவமைத்தவரை வீட்டு விலகி அவரின் கையேட்டை புறம்பே தள்ளுவது எவ்வளவு முட்டாள்தனமானது.

Prayer ஜெபம்: கர்த்தாவே, எனக்கு வேதாகமத்தைத் தந்ததற்காக நன்றி. நான் அதை இன்னமும் நன்றாக அறிந்துகொள்ள உதவும். ஆமென்.


No comments:

Post a Comment