Wednesday, October 26, 2011

SOAP 4 Today - வாக்குத்தத்தத்துடன் கொடுக்கப்பட்ட ஒரு வேலை

Scripture வேத வசனம்: அப்போஸ்தலர் 26: 15 அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
16. இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.
17. உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி,
18. அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.

Observation கவனித்தல் : பவுல் தான் ஆண்டவரை எப்படி சந்தித்தார் என்பதைக் குறித்து அவர் கூறுகிறார். தாம் துன்புறுத்துகிறே அதே ஆண்டவர்தாம் தமக்கு தரிசனமானதைக் குறித்து அவர் ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும். தம்மைச் சந்திக்க வந்த இயேசு பழிவாங்குவதற்காக வராமல் ஒரு வேலையைத் தருவதற்காக வந்ததைக் குறித்து அவர் அதிகம் ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும். பவுல் தான் காப்பாற்ற அவசியமில்லாத ஜனங்களிடம் அனுப்பப்பட்டார். பவுல் தானே இரட்சிக்கப்படுவதற்கு முன்பாகவே கர்த்தரிடமிருந்து மீட்கப்படுதலைக் குறித்த வாக்குத் தத்ததைப் பெற்றார்.

Application பயன்பாடு: எனக்கு பிரச்சனை இருக்கிறது என்றால் நான் கர்த்தரை விட்டு விலகி விட்டேன் என்று பொருள் அல்ல. என் வழியில் பிரச்சனை வரும்போது நான் ஆச்சரியப்படக் கூடாது. பிரச்சனை இல்லாத ஒரு வாழ்விற்கு நான் ஆண்டவரிடமிருந்து வாக்குதத்தம் பெறாமல், பிரச்சனைகளை ஜெயிப்பதற்கான வாக்குத்தத்தம் எனக்கு உண்டு. ஆன்ரே கூச் என்பவர் பாடியது போல: “ எனக்கு பிரச்சனைகளே வராதிருந்தால், தேவன் அவர்களை தீர்க்க முடியும் என்பதை அறிந்திருக்க மாட்டேன். தேவனில் உள்ள விசுவாசத்தினால் என்ன செய்ய முடியும் என்பதையும் நான் அறிந்திருக்க மாட்டேன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே தேவையுள்ள ஒரு இடத்திற்கு நீர் என்னை அனுப்புவீர் எனில், என் தேவைகளைச் சந்திப்பீர். வார்த்தை தேவைப்படுகிற இடத்திற்கு நீர் என்னை அனுப்புவீர் எனில் வார்த்தயையும் நீரே தருவீர்.

No comments:

Post a Comment