Sunday, October 30, 2011

SOAP 4 Today - விவேகமாக நடந்து கொள்ளுதல்

Scripture வேதவசனம்: மாற்கு 8:36 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

Observation கவனித்தல்: சில கேள்விகள் தனித்து நிற்கின்றன; அவைகளுக்கு பதில் தேவை இல்லை; ஏனெனில் பதில் வெளிப்படையாக இருக்கிறது. நம் நித்ய வாழ்வை இழந்து இந்த உலகில் பெறத்தகுதியானது என்று எதுவும் இருக்கிறதா?

விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு, அவர்கள் சரீரம் அதால் பாதிக்கப்படும் போதுதான் அவர்கள் இழந்தது என்ன என்பது அறியவரும். சில் காரியங்களை நித்ய வாழ்வு வரைக்கும் நாம் உணர்ந்து கொள்ள முடியாது.

Application பயன்பாடு: நான் தவறு என்று நினைக்கிற ஒன்றைச் செய்யத் தூண்டப்படும்போது, என் ஆத்துமாவை நான் இழப்பதற்கு இக்காரியம் தகுதியானதுதானா என நான் கேட்டுக் கொள்ள வேண்டும்.

Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியான்வரே, நான் பாவம் செய்வதற்கு சோதிக்கப்படும் போது எனக்கு இக்கேள்வியை நீர் நினைவுபடுத்தினால், நான் நித்யமட்டும் உமக்கு நன்றியுடையவனாக இருப்பேன்.

No comments:

Post a Comment