Scripture வேதவசனம்: கலாத்தியர் 4. நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,
5. காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
Observation: இயேசு ஏன் வந்தார்? அவர் ஏன் ஒரு பெண்ணிடம் பிறந்தார்? அவர் நியாயப்பிரமாணத்திற்குட்பட்டவராய் ஏன் பிறந்தார்? நம்மை மீட்கவும் நாம் தேவனுடையப் பிள்ளைகள் என்று உணரும்படிக்கு அவர் அவ்வாறு செய்தார்.
நம்மைப் பலப்படுத்தக் கூடிய இடத்தில் இயேசு நின்றார். அவர் நியாயை பிரமாணத்திற்குட்பட்டவராய் வந்து, அதை நிறைவேற்றினார். ஆனால் அதை அவர் தமக்காகச் செய்து முடிக்கவில்லை. ஏனெனில் அவர் பாவமில்லாதவராகப் பிறந்தவர், ஒரு போதும் பாவமே செய்யாதவர். அவருக்கு பாவங்களுக்காகப் பரிகாரப் பலி தேவையில்லை. ஆனால் அவர் நம் பாவங்களுக்கான பரிபூரணமான பலி ஆனார்.
பிள்ளைகள் எனும் முழு உரிமையை நாம் பெறுவதற்காக அவர் எல்லாவற்றையும் செய்தார். இதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த நிகழ்கால வாழ்க்கையில் மட்டுமல்லாது, வருங்கால வாழ்க்கையிலும் அவர் என்ன செய்ய முடியும் என்பதை யார் முழுமையாக அறிய முடியும்?
Application பயன்பாடு: இன்று நான் தேவனுடைய பிள்ளையாக இருக்கிறேன். தேவன் என்னை அவருடைய குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு, நான் இயேசுவைப் போல மாற வேண்டும் என எனக்கு இலக்கை நிர்ணயித்திருக்கிறார். நான் இக்குறிக்கோளை உணர்ந்து கொளவதற்கு இயேசு கிறிஸ்துவுக்கு இருந்தது போலவே பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் தேவை.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, இயேசுவைப் போல மாறுவதற்கு நீர் என்னை வழிநடத்துகிறதில், உம் சத்தத்தை இன்று கேட்க எனக்குதவும்.
No comments:
Post a Comment