Monday, October 31, 2011

SOAP 4 Today - மலை உச்சியிலும் பள்ளத்தாக்கிலும் கூட இருக்கிறார்

Scripture வேதவசனம்: மாற்கு 9:2 ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்;
8. உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசு ஒருவரைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
9. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவர் அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

Observation கவனித்தல்: பேதுரு, யோவான் மற்றும் யோவான் ஆகிய மூவரும் இயேசுவுடன் கூட ஒரு உயரமான பர்வதத்தில் இருந்தனர். இயேசு பரலோகம் சென்று இரு பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களான எலியா மற்றும் மோசே ஆகியவர்களுடன் திரும்பி வந்ததைக் காணும் பாக்கியமுடையவர்களாக அவர்கள் இருந்தனர். ஆனால் எல்லாம் திடீரென முடிந்து போயிற்று. எலியாவும் மோசேவும் சென்றுவிட்டனர். ஆணால் இயேசு மட்டும் அவர்களுடன் இருந்தார். அவர்கள் அனைவரும் ஒன்றாக இந்த உலகில் பிரச்சனைகளைச் சந்திப்பதற்காக மலையை விட்டு இறங்கினர். மலை ஏறும்போது அவர்களுடன் இருந்தவர் இறங்கும் போதும் கூட இருந்தார்.

Application பயன்பாடு: நண்பர்களுடனான அற்புதமான அனுபவம், தேவனுடனான ஆச்சரியமான அனுபவம் முடிவுக்கு வந்தது. ஆனால் அவருடைய பிரசன்னம் அவர்களுடனே கூட இருந்தது. சங்கீதக்காரனைப் போல (சங்கீதம் 23:4) பர்வதங்களின் அனுபவ உண்மையானது பள்ளத்தாக்கின் அனுபவங்களிலும் கூட உண்மையானதாகவே இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டேன். என்னுடனே கூட போகும் போது இருந்தவர் வரும் போதும் இருக்கிறார்.

Prayer ஜெபம் : கர்த்தாவே, என் வாழ்வில் உம் மாறாத பிரசன்னத்துக்காக நன்றி. ஆமென்.

No comments:

Post a Comment