Monday, November 7, 2011

SOAP 4 Today - உண்மையுள்ளவர்

Faithful

Scripture: 1கொரிந்தியர் 1:9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

Observation கவனித்தல்: தேவனுடைய மிகவும் முக்கியமான குணாதிசயங்களில் ஒன்று அவருடைய உண்மை ஆகும். தேவன் பரிசுத்தமானவர். அவருடைய பரிசுத்தத்தை அதிகம் வெளிப்படுத்துவது அவருடைய உண்மைத் தன்மையே. அவர் தம் ஜனங்களுக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார். அவர் சத்தியத்துக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார். அவர் தமக்குத்தாமேயும், தம் குணாதிசயத்துக்கும் உண்மையுள்ளவராக இருக்கிறார்.

Application பயன்பாடு: தேவன் எனக்காக எதையாகிலும் செய்யவேண்டும் என்று நான் விரும்பும்போது, புறம்பே தள்ளிவிட்டு விட வேண்டும் என்று நான் கேட்கக் கூடும். தேவன் தம் சத்தியத்துக்கு உண்மையுள்ளவராக இருப்பார் என்பதைக் கண்டுகொள்ளும்போது நான் அதிக மகிழ்ச்சியடையவேண்டும். ஏனெனில் அப்போதுதான் அவர் எனக்கு உண்மையுள்ளவராக இருப்பதை நான் கண்டு கொள்ள முடியும்.

Prayer ஜெபம்: ஆண்டவரே, உம் உண்மையுள்ள தன்மை என் மூலமாக வெளிப்படட்டும். ஆமென்.

No comments:

Post a Comment