Scripture வேதவசனம்: 1 கொரிந்தியர் 6: 19. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
20. கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
Observation கவனித்தல் : பரிசுத்த ஆவியான்வர் வாசம் செய்யும் தேவ ஆலயமாக என சரீரம் இருப்பதால் தேவன் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். என்னைச் சுற்றிலும் இருப்பவர்களுடன் உலகில் நான் தொடர்பு கொள்ள நான் என் சரீரத்தை பயன்படுத்துவதால், எனக்கு அது அதிக முக்கியத்துவமானது. நான் தேவனைப் பிரியப்படுத்தும் செயல்களை செய்வதன் மூலமாக தேவனை உயர்த்த என் சரீரம் அனேக வாய்ப்புகளைத் தருகிறது.
Application பயன்பாடு: நான் என் மூளையை ஒரு கம்ப்யூட்டர் போல இருப்பதாக எண்ணுகிறேன். என் கம்ப்யூட்டரில் இருவித நினைவகங்கள் உள்ளன. ஒன்றில் தேவையான எல்லா தகவல்களையும், மற்றொன்று கணினி இயங்கத் தேவையான தகவல்களை மட்டும் சேமிக்கிறது. என் மூளையும் இருவித நினைவகங்களைக் கொண்டுள்ளது என நினைக்கிறேன். சில தகவல்களை நினைவுக்குக் கொண்டு வர சிந்திக்க வேண்டியுள்ளது, சில தகவல்கள் உடனேயே நினைவுக்கு வந்து விடுகிறது.
நான் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தகவல் இந்த வசனத்தில் உள்ளது. நான் எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும், என் சரீரம் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்யும் ஆலயம் என்பதை நான் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, இன்று என் சரீரத்தை பயன்படுத்துகிற விதத்தில் உம்மை உயர்த்த எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment