Scripture வேத வசனம்: 1 கொரிந்தியர் 7:16 மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?
Observation கவனித்தல்: விவகாரத்து பண்ண விரும்பும் விசுவாசிகள் தங்கள் விருப்பத்தை நியாயப்படுத்த, நான் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று சொல்லி, வேறு யாரையாகிலும் பின் திருமணம் செய்ய விரும்புவர். நான் என் வாழ்க்கை முழுவதிலும் மகிழ்ச்சியற்று இருக்க விரும்ப மாட்டார். இல்லை. இல்லை. தேவன் உங்கள் வாழ்க்கைத் துணையைக் குறித்து விரும்புவது எனில் அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே. உங்களுடன் உங்கள் வாழ்க்கைத் துணையும் பரலோகத்தில் இருந்து நீங்கள் நித்தியத்திலும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் நேசிக்கப்படத் தக்கவர்களாக இல்லாவிடினும், கிறிஸ்து நம்மை நேசித்தது போல நாம் நம் வாழ்க்கைத் துணையை நேசிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தாங்கள் நேசிக்கப்படவில்லை என்று சொல்லும்படியாக அவிசுவாசியான வாழ்க்கைத் துணை விவாகரத்து செய்யப்படவேண்டுமா?
Application பயன்பாடு: தேவனுக்காக வாழ்வது என்பது விலையேறப்பெற்றது, ஆயினும் அது எப்போதும் எளிதானதல்ல. தேவனுக்கு முன்பாக நான் உறுதி செய்த திருமண வாக்கை காப்பாற்ற என்னால் இயன்ற சிறந்த செயலைச் செய்வது நல்லது. ஆனால் அது எல்லாவேளைகளிலும் எளிதானது அல்ல. நம் வாழ்வின் ஒவ்வொரு வேளையிலும் நம்முடனே அவருடைய பிரசன்னம் இருக்கும் என்பதைக் குறித்த வாக்குத்தத்தம் நமக்கு உண்டு.
Prayer ஜெபம்: கர்த்தாவே, 50, 50 மற்றும் 70 வருடங்களுக்கும் மேலாக திருமண வாழ்வை வாழ்கிறவர்களுக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். அவர்கள் வாழ்க்கை எங்களுக்கு எவ்வளவு ஆசீர்வாதமான முன்னுதாரணமாக இருக்கிறது. ஆமென்.
No comments:
Post a Comment