Sunday, November 13, 2011

SOAP 4 Today - ஒரு புதிய பாடல்

Scripture வேதவசனம்: சங்கீதம் 149:1 அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.

Observation கவனித்தல்: சங்கீதப் புத்தகத்தில் துதியானது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து துதியுடனே முடிகிறது. நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது தேவனைத் துதிக்கவேண்டும் என்று கடைசி அதிகாரத்திற்கு முந்திய இந்த அதிகாரத்தில் நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். சபையாகப் பாடுவது நம் துதிக்கு வலிமையைக் கொடுக்கிறது. பழைய பாடல்கள் நன்கு அறியப்படிருந்தவையாக இருந்தாலும் கூட, புதிய பாடல்களைப் பாடவேண்டும் என்று சங்கீதக்காரன் இங்கு சொல்கிறார். அப்பழைய பாடல்கள் எழுதப்பட்ட போது தேவன் விசேசமான வழிகளில் தம்மை அறியச் செய்திருந்தார். ஆனால் அவர் கிரியை செய்வதை நிறுத்தவில்லை. அவர் இன்றும் நம் நடுவில் கிரியை செய்துகொண்டுதான் இருக்கிறார். புதிய பாடல்களைப் பாடுவதற்கு நமக்கு அனேக காரணங்கள் உண்டு.

Application பயன்பாடு: நான் இன்று சபையில் பாடக் கேட்கும் புதிய பாடல்களின் பெரும்பாலானவை புதிய தலைமுறையினரிடம் இருந்து வந்தவை ஆகும். சில பாடல்கள் எனக்கு பாடுவதற்குக் கடினமானதாக இருந்தாலும், நான் அவைகளைப் பார்க்கும்போதும், கேட்கும்போதும் நான் நேசிக்கிற கர்த்தரை துதித்து என் இருதயம் மகிழ்கிறது. நான் பல ஆண்டுகளாகப் பாடின நித்திய சத்தியங்களைக் குறித்த புதிய வெளிப்படுத்தல்களைக் கேட்பது எனக்கு ஆசீர்வாதமானதாக இருக்கிறது. அந்த்ச் சத்தியங்களை புதிய வார்த்தைகளில் கேட்பது என்பது கிங் ஜேம்ஸ் பொழிபெயர்ப்பை கீழே வைத்துவிட்டு NIV மொழிபெயர்ப்பை எடுத்து வாசிப்பது போல இருக்கிறது. வார்த்தைகள் வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் சத்தியம் மாறவில்லை.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் புதிய பாடல்களைக் கேட்கும்போது என் இருதயத்திற்குச் செவிகொடும். என் பிள்ளைகளின் தலைமுறையை நீர் இப்புதிய பாடல்களின் மூலமாகத் தொடுகிறீர் என்பதை நான் காண உதவும். நான் நன்றியுள்ள இருதயத்துடன் அப்பாடல்களுக்காக அகமகிழ்வேன். ஆமென்.

No comments:

Post a Comment