Tuesday, November 15, 2011

SOAP 4 Today - என் எதிர்காலம்

Scripture வேதவசனம்: 2கொரிந்தியர் 5:4 ம் இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.
5. இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.

Observation கவனித்தல்: தேவன் நம்மை உருவாக்கியதில் வைத்திருக்கும் மாபெரும் நோக்கம் என்ன? இங்கே தேவன் மனிதனை உருவாக்கிய நோக்கம் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல என்பதைக் காண்கிறோம். நாம் வாழ்கிற இந்த உலகம் தற்காலிகமான உடையாகவே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீக்கிரத்தில் அழிந்துபோகாத உடை நமக்குக் கொடுக்கப்படும்.

Application பயன்பாடு: நான் என் நிகழ்காலச் சூழ்நிலைகளை எப்படி சமாளிக்கிறேன் என்பது என் எதிர்கால எதிர்பார்ப்புகள் மீது அதிக தாக்கத்தை உண்டாக்குகிறது. பரிசுத்தமுள்ள தேவனுக்கு முன்பாக வரவேண்டும் என்ற என் எதிர்பார்ப்பு என் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டது என்றும் கிறிஸ்து எனக்குள் வாழ்கிறார் என்பதைக் குறித்த ஒரு உறுதியை உடையவனாக நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. நான் இந்த வாழ்க்கையிலேயே எல்லா பலன்களையும் பெற்றுவிடவேண்டும் என்பதில்லை. எல்லா விசயங்களையும் விசாரிப்பதற்கு நித்தியமான காலங்கள் தேவனிடம் உண்டு. அன்பின் தேவனுக்கு முன்பாக வரவேண்டும் என்ற என் விருப்பம் என்னைச் சுற்றிலும் உள்ளவர்களை நேசிப்பதன் மூலமாகவே நான் அவரைப் பிரியப்படுத்தமுடியும் என்று என்னை எண்ணச் செய்கிறது. நான் நேசிப்பதற்கு விலைக்கிரயம் கொடுக்க வேண்டியது இருக்குமெனில், என்னை நேசிப்பதற்கு அவர் எவ்வளவு விலைக்கிரயம் கொடுத்திருப்பார் என்பதை நான் யோசித்துப் பார்க்கிறேன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும், நாம் இயேசுவைக் காணும்போது வாழ்வின் பிரச்சனைகள் மிகச் சிறியதாகத் தோன்றும். அவருடைய அருமையான முகத்தின் ஒரு சிறிய காட்சிகூட என் வருத்தங்களை முழுமையாக நீக்கிவிடும். ஆகவே, கிறிஸ்துவைக் காணுமட்டும், தைரியமாக ஓட்டத்தை ஓடுவேன் என்று என்னால் பாடமுடியும். ஆமென்.

No comments:

Post a Comment