Scripture வேதவசனம்: மத்தேயு.11:1 இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார்.
Observation கவனித்தல்: இந்த வசனத்தில், இயேசு தம் சீடர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஊழியம், ஏராளமானவர்களுக்கு பொது ஊழியம் செய்கிறதையும் நாம் காண்கிறோம். இயேசு தன்னோடு தனியே இருந்தவர்களுக்கும், அவர்களோடு இருக்கும்படி நேரம் கொடுத்தார். பின்பு அவர் மற்ற ஜனங்களின் மத்தியில் ஊழியம் செய்யச் சென்றார். அவர்கள் எல்லாரும் அவரை எளிதில் கண்டுகொள்ள முடிந்தது.
Application பயன்பாடு: நான் இயேசுவைப் போல வாழ முயற்சிக்கையில், நான் வாழ்கிற இவ்வுலகில் எனக்கு என் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் என் நண்பர்கள் மத்தியில் எனக்கு தனி ஊழியமும், மற்றவர்கள் மத்தியில் பொது ஊழியமும் இருக்கிறது. அவை இரண்டுவிதமான் ஊழியங்கள் அல்ல, மாறக என் பரமப் பிதாவைப் பிரியப்படுத்த்உம் என் ஊழியத்தின் இரு பக்கங்கள் ஆகும்.
Prayer ஜெபம்: பரமப் பிதாவே, நான் ஊழியம் செய்யும்படிக்கு நீர் என்னை அனுப்பியவர்கள் மத்தியில் நீர் உயர்த்தப்படுவீராக. உடவி தேவைப்படுபவர்களுக்கு நான் உதவி செய்யக் கூடியவனாக எப்பொழுதும் இருக்க உதவும். ஆமென்.
No comments:
Post a Comment