Sunday, November 20, 2011

SOAP 4 Today - விழுந்து போன பறவைகளும், தலை முடியும்

Scripture வேதவசனம்: மத்தேயு 10: 29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.
30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

Observation கவனித்தல்: குருவிகளை நான் ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. அவை இறந்து போவதை நான் பார்த்ததில்லை. ஆனால் நான் தேவனுக்கு மிகவும் முக்கியமானவன். அவர் என்னைக் குறித்த ஒவ்வொரு விசயங்களையும், என் தலை முடியின் எண்ணிக்கையையும் கூட கவனிக்கிறார். என் தலையில் இருந்து உதிர்கிற ஒவ்வொரு முடியும் தரையில் விழுந்து இறந்து போன பறவைகளுடன் சேர்வதை நான் உணர்கிறேன்.

Application பயன்பாடு: என் தலைமுடியைக் கூட அறியுமளவுக்கு, சிருஷ்டிப்பின் தேவன் என்னைக் குறித்த அக்கறையுடையவராக இருப்பார் எனில், என்னைக் குறித்து அவர் அறியாதது என்று எதுவும் இருக்க முடியாது. ஒரு மருத்துவர் சோதனைச் சாலை முடிவுகளை வாசிக்கலாம், ஆனால் என் தேவன் என்னைக் குறித்து அறிந்திருப்பவைகளை அவர் எனக்குச் சொல்ல முடியாது. தேவன் கவலைப்படாதிருந்தால், நானும் கவலைப்படக் கூடாது. அவர் குருவிகளைக் கவனிக்கிறார், ஆனால் எனக்குள்ளோ வாழ்கிறார்.

Prayer ஜெபம்:கர்த்தாவே, உம்முடைய நினைவுலும், உம்முடைய பராமரிப்பிலும் இருப்பது என்பது எனக்கு மிகச் சிறப்பான இடம் ஆகும். ஆமென்.

No comments:

Post a Comment