Scripture வேதவசனம்: மத்தேயு 21:15 அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,
16. அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.
Observation கவனித்தல்: இந்த அதிகாரத்தில் ”எழுதியிருக்கிறது” என்று தேவாலயத்தைச் சுத்தப்படுத்தும் தம் செயலுக்கு விளக்கமாக இயேசு முன்னதாக ச் சொன்னார். இங்கே (மற்றும் 42ம் வசனத்தில்) “ஒருக்காலும் வாசிக்கவில்லையா?” என்று கேட்கிறார். நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்திருந்தால், நம் பல கேள்விகளுக்கு எளிதில் விடை கிடைத்திருக்கும். தேவனுடைய வார்த்தையை நாம் வாசிக்கும்போது அவரைக் குறித்து நாம் அறிந்து கொள்கிறோம். அந்த வார்த்தைகளின் படி நாம் வாழும்போது அவரையே நாம் உண்மையாக அறிந்து கொள்கிறோம். தேவனுடைய வார்த்தையை வாசித்தல் அதின்படி வாழவேண்டும் என்ற விருப்பத்தை நமக்கு உண்டாக்குகிறது. வாசித்ததின் படி வாழ்தல் இன்னும் அதிகமதிகமாக வாசிக்கவேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்குகிறது.
Application பயன்பாடு: உயிருள்ள ஜீவ வார்த்தையாகிய இயேசுவை நான் அறிந்து கொள்ள உதவும்படி பரிசுத்த வேதாகமம் தேவனால் மிகவும் அற்புதமாக எனக்கு அருளப்பட்டிருக்கிறது. வேதாகமத்தை வாசிக்காமல் ஒரு நாளைக் கழிப்பது என்பது, என் மனிவியிடம் ஒருவார்த்தையும் பேசாமல் ஒரு நாள் முழுவதும் இருப்பதைப் போன்றது. தொடர்பு அறுந்து போகும்போது, உறவும் உடைந்து விடுகிறது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உமக்காக வாழ்வது என்பது அனுதினமும் செய்யவேண்டியது என்பதை எனக்கு தொடர்ந்து நினைவுபடுத்தும். ஆமென்.
No comments:
Post a Comment