Scripture வேதவசனம்: மத்தேயு 26:8 அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு?
9. இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.
10. இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
Observation கவனித்தல்: இயேசுவின் மீது கொண்ட அன்பு மற்றும் பிடிப்பின் காரணமாக இந்தப் பெண் அந்த விருந்துக்கு வந்து அவரது தலையின் மீது பரிமள தைலத்தை ஊற்றினாள். இயேசுவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் அப்பெண்ணின் செயலை வீண் என்று கூறினர். ஆனால் இயேசு அதை வேறுவிதமாகக் கண்டார். இயேசு அவரது செயலுக்கு மதிப்புக் கொடுத்தார். சில நாட்கள் கழித்து சிலப் பெண்கள் இயேசுவின் சரீரத்தில் பூசுவதற்காக வாசனைப் பொருட்களுடன் கல்லறைக்குச் சென்றனர். ஆனால் அது மிகவும் தாமதமான ஒன்றாக இருந்தது. இந்த வசனத்தில் நாம் காணும் பெண்ணுக்கே அந்த பாக்கியம் கிடைத்தது.
Application பயன்பாடு: சில வேளைகளில் என் செயல்கள் “வீண்” என்று நியாயந்தீர்க்கப்படலாம், மற்ற வேளைகளில் நான் மற்றவர்களின் செயல்களை “வீண்” என்று கூறலாம். ஆனால் நான் அவரின் அங்கீகாரத்தைப் பெறுவதைத் தேட வேண்டும். மற்றவர்களுக்கும் இதே சுதந்திரத்தை நான் கொடுக்க வேண்டும்.
Prayer ஜெபம் : கர்த்தாவே, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல, நீர் என்ன நினைக்கிறீர் என்பதே முக்கியம். ஆமென்.
No comments:
Post a Comment