Wednesday, December 7, 2011

SOAP 4 Today - மகிழ்ச்சி & நன்றி

Scripture வேதவசனம்: கொலோசேயர் 1:3. கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
4. பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
5. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.

Observation கவனித்தல்: பிலிப்பியில் உள்ளவர்களுக்காக ஜெபம் பண்ணும்போதெல்லாம் பவுல் மகிழ்ச்சி நிறைந்த இருதயத்துடன் ஜெபித்தார் என்பதை நான் நேற்று குறிப்பிட்டேன். இங்கு கொலோசே பட்டணத்தில் உள்ளவர்களுக்காக மகிழ்வுடன் ஜெபிப்பதக் காண்கிறோம்.

Application பயன்பாடு: மகிழ்வுடன் ஜெபிப்பதற்கு எனக்கு பல காரணங்கள் உண்டு. அனேகருக்காக நான் ஜெபிக்கும் மகிழ்வுடன் ஜெபிக்கிறேன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் ஒரு தீவில் தன்னந்தனியனாக கைவிடப்பட்டவனாக இருக்கவேண்டும் என்று நீர் விரும்புகிறதில்லை. என் வாழ்க்கையில் அனேக நல்ல மனிதர்களை நீர் வைத்திருக்கிறதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.

No comments:

Post a Comment