Scripture வேதவசனம்: 1 தீமோத்தேயு.2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;
Observation கவனித்தல்: நான் சிறு பையனாக இருந்தபோது, கோடை காலத்தில் நாங்கள் டும்பமாக எங்கள் தாத்தாவீட்டிற்குச் சென்று அவர்களுடன் தங்குவதுண்டு. ஒரு நாள் இருவு தூங்கிக் கொண்டிருக்கும்போது என் மாமா வந்து எங்களை எழுப்பி அர்க்கன்சாஸ் நதியில் வெள்ளம் வந்து. சீக்கிரத்தில் அது எங்கள் வீடு இருக்கும் இடத்தையும் சூழ்ந்து கொண்டு விடும் என்று கூறி எங்களை வெளியே அழைத்துச் சென்றார். நாங்கள் அவசர அவசரமாக கிளம்ப வேண்டியதாயிருந்தது. எந்த பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தார். நாங்கள் அவரை நம்பி, அவரைப் பின்தொடர்ந்துச் சென்றோம். அந்தப் பிரச்சனையில் இருந்து நாங்கள் வெளிவருவதற்கு அவரே வழியாக வழிகாட்டியாக இருந்தார். அவர் ஒருவரே பாதுகாப்பான இடத்திலிருந்து வந்தவர், எங்களை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லும் வழியை அறிந்தவர்.
Application பயன்பாடு: பாவத்திற்கு வரும் தண்டனையிலிருந்து தப்ப வேண்டும் என்ற நான் விரும்புகிறேன். இயேசு பாதுகாப்பான இடத்திலிருந்து வந்தவர் என்பதாலும் தேவனுடன் எனக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஒப்புரவாக்குதலின் பலியைச் செய்தார் என்பதனாலும் நான் மிகவும் மகிழ்கிறேன். அவர் பரலோகத்திற்குச் செல்லும் பாதையை அறிந்தவர் மாத்திரமல்ல, அவர் ஒருவர் மாத்திரமே பரலோகம் செல்வதற்கான வழியாகவும் இருக்கிறார். சில வேளைகளில் நான் குறுக்கு வழிகள் ஏதாவது உண்டா என்று பார்க்கிறேன். ஆனால் நான் ஆறுகளைக் கடக்க க் கூடிய சிறந்த இடம் எது என்பதை அவர் அறிந்திருக்கிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் இருக்க விரும்புகிற இடத்திலிருந்து வந்தவர் நீர் ஒருவரே. பரலோகம் செல்லும் பாதையை அறிந்தவர் நீர் ஒருவரே. நான் என் வாழ்க்கையை உம் கரங்களில் ஒப்புவித்து, உம்மை நான் நம்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment