Scripture வேதவசனம்: தீத்து 3:5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
6. தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக,
7. அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
Observation கவனித்தல்: மேற்கண்ட வசனங்கள் நாம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவைகளைச் சுட்டுகிறதைக் காணலாம்.
Application பயன்பாடு: என் கடந்த காலத்தில், நான் மன்னிக்கப்பட்டு, தேவனுடைய கண்களில் பாவமில்லாதவனாக்கப்ப்ட்டேன். நான் அவருடைய கிருபையினான் நீதிமானாக்கப்பட்டேன். (ரோமர்.3:24)
நிகழ்காலத்தில், நான் சுதந்தரவாளியாகவும், தேவனுடைய பிள்ளையாகவும் அவருடைய குடும்பத்தில் இருக்கிறேன். (ரோமர் 8.17)
எதிர்காலத்தில், எனக்கு ஒரு நித்திய நம்பிக்கை உண்டு.இயேசு எனக்காக ஆயத்தம் பண்ணச் சென்றிருக்கும் இடத்தைப் பற்றிய எனது தேவனுக்குள் உள்ள ஜீவ நம்பிக்கை ஆகும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் என் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்காலம் ஆகிய அனைத்துக்கும் தேவையான எல்லாவற்றையும் தந்திருக்கிறீர். என் முழு வாழ்க்கையும் உம் கரத்தில் இருக்கிறது என்பதை அறிவதில் மிகவும் மகிழ்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment