Those in prison…
Scripture வேதவசனம்: எபிரேயர் 13:3 கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
Observation கவனித்தல்: எபிரேயர் நிரூபத்தின் கடைசி அதிகாரத்தில் காணப்படும் அனேக அறிவுரைகளில், தங்கள் விசுவாசத்துக்காக உபத்திரவப்படுத்தப்படுபவர்களைக் குறித்த இந்த அறிவுரை நினைவு கூரவேண்டியது ஆகும். இது பாடுகளின் மத்தியில் வாழும் சகோதர சகோதரிகளும் நமக்கு உண்டு என்பதை ஒப்புக் கொள்ளும் வசனம் ஆகும். இது நாமும் அவர்களைப் போல கட்டப் பட்டவர்களாக அல்லது அவர்கள் அனுபவிக்கும் உபத்திரவத்தை அனுபவிப்பதைப் போன்ற ஒன்றாகும்.
Application பயன்பாடு: நான் கட்டப்பட்டிருந்தாலோ அல்லது உபத்திரவத்தினால் பாடுபட்டாலோ, ஜெபிப்பதற்கு எனக்கு யாரும் நினைவுபடுத்த வேண்டியதிருக்காது. இரத்த சாட்சிகளின் குரல் என்ற இணையதளம் உலகமெங்கிலும் நடைபெறும் உபத்திரவங்களைக் குறித்த நடப்புச் செய்திகளைத் தருகிறது. (www.voiceofthemartyrs.com) . இவர்கள் தரும் செய்திகளைக் கொண்டு நான் உபத்திரவப்படுபவர்களுக்காக ஜெபிக்கிறேன்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியே, என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் தறாக நடத்தப்படும் போது நான் அதை அறிந்து கொள்ள உதவும். நான் நீதி மற்றும் கிருபையின் வாய்க்காலாக இருக்க உதவும். ஆமென்.
No comments:
Post a Comment