Scripture வேதவசனம்: யாக்கோபு.1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
யாக்கோபு 3:17 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.
Observation கவனித்தல்: ஞானம் மிகவும் மதிப்புள்ளது ஆகும். ஞானம் குறைவாக இருக்கும்போது, ஞானத்தைப் பெறக் கூடிய இடத்தைக் கண்டடைவது மிகவும் அவசியமானது ஆகும். தேவனை விட ஞானத்தைக் கண்டடையும் சிறந்த இடம் வேறு எதுவும் இருக்கமுடியாது. அவர் கடிந்து கொள்ளாமல், ஞானத்தை தாராளமாக நமக்குத் தருகிறார்.
Application பயன்பாடு: நான் அனேக முறைகள் ஞானம் வேண்டி ஜெபித்திருக்கிறேன். ஆயினும், பரலோகில் இருந்து வரும் இந்த ஞானத்தின் பல்வேறு சிறப்பியல்புகளை கவனித்துப் பார்க்க நான் நேரம் ஒதுக்கியதில்லை. “என் மனதிலிருந்து ஒரு கருத்து அல்லது ஆலோசனையை” நான் ஒருவருக்குக் கொடுப்பது என் உலக ஞானத்தைக் காட்டக் கூடும், பரத்திலிருந்து வரும் ஞானத்தை அது வெளிப்படுத்துவதில்லை. நான் செய்து முடிக்க முடியாதவைகளைச் செய்து முடிக்க ஒருவர் என்னிடம் சொல்லும்போது “கீழ்ப்படிதல்” எனும் குணமே எனக்கு இன்று மிகவும் அவசியமானதாக இருக்கிறது. கடந்த காலங்களில் கேள்வியே கேட்காமல் நான் இப்படிச் செய்திருக்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த புதிய வாழ்க்கையை வாழ்வதற்கான சிறப்பான வழிகாட்டுதல்களைத் தரும் யாக்கோபு நிருபத்துக்காக நன்றி. உம் ஞானத்தின் கீழ்ப்படியும் தன்மையை நான் நன்றாக கற்றுக் கொள்ள எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment