Monday, December 19, 2011

SOAP 4 Today - முதலிடம்

Top Priority

Scripture வேதவசனம்: யோவான் 5: 19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.

Observation கவனித்தல்: இவ்வசனத்திலும், வேத பகுதியிலும் இயேசு பிதாவோடு கூட தாம் கொண்டிருந்த விசேசமான உறவை வெளிப்படுத்துகிறார். இயேசுவின் வாழ்வில் பிதாவானவரே முதலிடம் வகித்தார் என்பதில் சந்தேகமே இல்லை.

Application பயன்பாடு: நானும் கூட இந்த சிறப்பான உறவில் ஒரு அங்கமாக இருக்கும்படியாக இயேசு பாடுபட்டு சிலுவையில் எனக்காக மரித்தார். என் வாழ்வில் எதற்கு முதலிடம் என்ற கேள்விக்கு இடமில்லை. என்னை அறிந்து கொள்கிறவர்கள், இயேசுவே கர்த்தர் என்றும் நான் பரலோகப் பிதாவின் மகிமைக்காக வாழ்கிறேன் என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, பரலோகத்தில் இருக்கிற நம் பிதாவின் மகிமைக்காக வாழ நானும் உம்முடன் இணைந்து கொள்கிறேன்.


No comments:

Post a Comment