Scripture வேதவசனம்: வெளிப்படுத்தல் 6: 15 பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,
16. பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
17. அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.
Observation கவனித்தல்: ஒரு தாய் தான் மிகவும் நேசிக்கும் ஒரு குழந்தையை யாராவது வேதனைப்படுத்த முற்ப்படும்போது அவள் மிகவும் கோபப்படுவது இயல்பு. அவள் எவ்வளவு அதிகமாக தன் குழந்தையை நேசிக்கிறாளோ அவ்வளவு அதிகமாக கோபத்தை வெளிப்படுத்துவாள்.
தேவ குமாரனாகிய இயேசு பிதாவாகிய தேவனை மிகவும் அதிகமாக நேசித்தார். ஆகவேதான் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்களை மீட்டுக் கொள்வதற்காக பூமிக்கு வர விருப்பமுள்ளவராக இருந்தார்.
பிதாவாகிய தேவன் இயேசுவை அதிகமாக நேசிக்கிறபடியால், அவர் யாருக்காக மரித்தாரோ அவர்கள் அவரைக் கனம் பண்ண வேண்டுமென்று விரும்புகிறார்.
இயேசு யாருக்காக ஜீவனைக் கொடுத்தாரோ, அவர்கள் அவரைப் புறக்கணிக்கும்போது அது பிதாவாகிய தேவனை கோபம் கொள்ளச் செய்கிறது. அவர் தம் குமாரனை நேசிக்கிறார்.
Application பயன்பாடு: என்னை நேசிக்கிற தேவன் தம் குமாரனாகிய இயேசுவையும் நேசிக்கிறார் என்பதை நினைவுகூர்வது நல்லது. நான் இயேசுவுக்கு செய்யும் எதையும் பிதாவாகிய தேவன் தனக்கே செய்யப்பட்டதாக எடுத்துக் கொள்கிறதை நான் கண்டுகொள்ளும்போது ஆச்சரியப்படக் கூடாது (யோவான் 5:23 tன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ..... ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.)
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எப்பொழுதுமே பரிசுத்தமானவராகவும் அன்புள்ளவராகவும் இருக்கிறீர். நீர் கோபப்படும் போதும் கூட, உம் கோபமானது உமது நீதியின் எல்லையை மீறி வெளிப்படுவதில்லை. அது நீர் மிகவும் நேசிக்கிற பிதாவாகிய தேவனை கனவீனப்படுத்துகிறவர்களுக்கு எதிரானது ஆகும். ஆமென்.
No comments:
Post a Comment