Scripture வேத வசனம்: வெளிப்படுத்தல் 17: 12 நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
13. இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
14. இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
Observation கவனித்தல்: அவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறார். அவர் என் பக்கம் இருக்கிறாரா என்பது அல்ல கேள்வி, நான் அவர் பக்கத்தில் இருக்கிறேனா?
Application பயன்பாடு: “நான் அவரோடு கூட இருப்பதால் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்ற இதே வரிகளை நான் ஒரு இரவில் வியட்நாமில் ஒரு சிறு குகையில் பதுங்கி இருந்த போதும் சொன்னேன். அந்த இரவில் எங்களை அழிக்கும் படி தொடர்ச்சியாக குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருந்தன.
நான் வெளிப்படுத்தல் புத்தகத்தை எவ்வளவு அதிகமாக வாசிக்கிறேனோ, அவ்வளவதிகமாக “நான் அவரோடு கூட இருப்பதால் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்று நான் கூறிக்கொள்வதைக் காண்கிறேன். உருவக மொழிகளை ஒருவேளை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் “நான் அவரோடு கூட இருப்பதால் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்று சொல்லுமளவுக்கு என்னால் புரிந்து கொள்ள முடியும்.
Prayer: கர்த்தாவே, நான் உம் பக்கத்தில் இருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். என் பாவங்களை மன்னித்து என்னையும் உம் பிள்ளையாக ஏற்றுக் கொண்டதற்காக நன்றி. நான் உம் பாதுகாப்பு எல்லையை விட்டு விலகி வழிதப்பிப் போகாதபடிக்கு காத்துக் கொள்ளும், நான் அவ்வாறு வழிவிலகிப் போகும்போது உடனடியாக என்னை திரும்பவும் இழுத்துக் கொள்ளும். ஆமென்.
No comments:
Post a Comment