Sunday, January 1, 2012

SOAP 4 Today - இவ்வருடத்திற்கான சத்தியம்

Scripture வேதவசனம்: லூக்கா 1:37 தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.

Observation கவனித்தல்: சில காரியங்கள் நம்புவதற்குக் கடினமானதாக இருக்கக் கூடும் என்று மரியாளோடே பேசிக்கொண்டிருந்த அந்த தூதன் சொன்னான். அவளின் உறவினரான எலிசபெத வயது சென்றவளாயிருந்தாலும் கூட குழந்தை பெறக் கூடும், மேலும் மரியாள் ஒரு கன்னியாக இருந்தாலும் கூட அவளும் ஒரு குழந்தையைப் பெற முடியும். அந்தக் குழந்தை (பரிசுத்த ஆவியினால் உற்பவித்து) உன்னதமானவரின் குமாரன் என்று அழைக்கப்படும் அதே வேளையில் (மரியாள் தாவீதின் வம்சத்தில் வந்தவளாக இருப்பதால்) தாவீதின் சிங்காசனம் அவருக்கு அருளப்படும்.

இது எப்படியாகும்? வதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக:தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.

அந்த தூதனின் வார்த்தைகள் அவனை மரியாளிடம் அனுப்பிய தேவனின் தன்மையையும் வல்லமையையும் அறிவிக்கிறது. இந்த உண்மையை மரியாள் வரும் காலத்தில் பயன்படுத்த வேண்டியதாயிருந்தது.

Application பயன்பாடு: புதிய வருடத்திற்குள் நான் நுழைகிறேன். நானும் அந்த தேவ தூதனின் வார்த்தைகளையே பேச வேண்டும். என் சுழ் நிலைகள் மரியாளின் சூழலுக்கு வேறுபட்டவைகள். ஆனால் என் தேவன் மாறவில்லை. எனக்குத் தெரியாதப் வரப்போகும் காலத்தைக் குறித்து சத்தியமானது வெளிச்சமிட்டு காண்பிக்கிறது: தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.

Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்மாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை. அது உண்மையென நம்பி நான் வாழப் போகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment