Scripture வேதவசனம்: எபேசியர் 5: 15 ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,
16. நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
Observation கவனித்தல்: நாம் கவனமாகச் செயல்படுவதற்கு “பொல்லாத நாட்கள்” ஒரு நல்ல காரணமாக இருக்கலாம். ஆனால் பவுல் இங்கே ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். “”பொல்லாத நாட்கள்” நாம் பயந்து பின் வாங்குவதற்கானவை அல்ல, தைரியமாக முன்னேறிச் செல்வதற்கான நாட்கள் ஆகும்.
Application பயன்பாடு: எனக்கு வேலை இல்லை என்பதினால் எனக்கு வாய்ப்புகள் குறைவு என்று எண்ணிவிடக் கூடாது. எனக்கு வரும் ஓவொரு வாய்ப்பையும் நான் கர்த்தருக்குப் பயன்படுத்த வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் வாழ்வில் வரும் வாய்ப்புகளை உடனடியாகக் கண்டுகொள்ள உதவும். பின்னர் தைரியமாக முன்னேறி உம்மை கனப்படுத்த உதவும்.
No comments:
Post a Comment