Scripture வேத வசனம்: ஆதியாகமம் 15:1 1. இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
Observation கவனித்தல்: தேவன் ஆபிராமிடம் சொன்ன வாக்கியம் எவ்வலவு சிறப்பானது! தேவனுக்குப் பயப்படத் தேவை இல்லை என்பது அவருடைய பாதுகாப்பையும், அவர் தரும் பலனையும் வாக்குப் பண்ணுகிறது. நான் இந்த வசனம் எனக்கு தேவன் சொன்னது என்று எடுத்துக் கொண்டு அதற்குப் பின் அந்த வசனத்தில் வருபவைகளைப் பார்க்காமல் விட்டு விடலாம். ஆயினும் முதல் இரண்டு வார்த்தைகள் கடைசியில் வரும் தேவனுடைய வார்த்தைக்குச் சமமானது. ஆபிராமிடம் தேவன் பேசின மற்ற வாக்கியங்களைப் போல, இந்த ஆசீர்வாத வாக்கியமானது ஆபிராம் தேவனைப் பிரியப்படுத்தும் செயலைச் செய்த பின்பு வந்தது. இது ஆபிராமுக்கு தேவன் அளித்த பதில் ஆகும். ஆபிராமின் செயல்கள் தேவனைப் பிரியப்படுத்தின. சிறைப்பட்டவர்களை காப்பாற்றியமைக்காக அவர்கள் கொடுத்த ஐசுவரியத்தை ஆபிராம் ஏற்க மறுத்தான். தேவனிடத்திலிருந்தே ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறான் என்பதை மக்கள் காண வேண்டும் என்று ஆபிராம் விரும்பினான்.
Application பயன்பாடு : மிகவும் எளிமையானது. என் வாழ்வில் நான் தேவனுடைய ஆசீர்வாதங்களைக் காண விரும்பினால், தேவன் ஆசீர்வதிக்க விரும்புகிற ஒரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, நான் கேட்க விரும்பும் வேத பகுதியை வேகமாக திருப்புகையில் முக்கியமான பகுதிகளை விட்டு விடாதபடிக்கு என்னை சோதித்தருளும். ஆமென்.
No comments:
Post a Comment