Scripture வேத வசனம்: ஆதியாகமம் 12:8 பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம் போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
Observation கவனித்தல்: ஆபிரகாம் கர்த்தர் தனக்கு காட்டிய வழியில் சென்றான். ஆபிரகாம் தனக்கென்று ஒரு கூடாரத்தை நாட்டினாலும், கர்த்தருக்கென்று ஒரு பலிபீடத்தையும் கட்டினான். அவனுடைய உலக வாழ்க்கை தற்காலிகமான ஒரு கூடாரத்தில் அமைந்திருந்தாலும் அவனுடைய ஆராதனை அவன் கட்டின பிலிபீடத்தைச் சுற்றியே (நிரந்தரமானதாக) அமைந்திருந்தது.
இன்று அனேகர் தங்கள் வீட்டைக் கட்ட மிகுந்த பிரயாசப்படுகின்றனர். ஆனால் ஆராதிப்பதற்கு வசதியான எல்லா இடங்களிலும் ஆராதிக்க மனமற்று, கவர்ச்சியான இடங்களுக்கு அல்லது தங்கள் பெற்றோர் சென்ற இடத்திற்கே செல்ல விரும்புகின்றனர். சிலர் தங்கள் விட்டு வேலைகளை நிறைவேற்றுவதற்காக ஆலயம் செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர்.
Application பயன்பாடு: ஒரு பாடலாசிரியர் மிகவும் அருமையாக எழுதி இருக்கிறார்: இந்த உலகம் எனது வீடல்ல, நான் ஒரு சாதாரண வழிப்போக்கன் மாத்திரமே! “This world is not my home; I’m just a passing through…” என் வாழ்க்கையில் நிரந்தரமான ஒன்று தேவனுடனான என் உறவே.
Prayer ஜெபம்: கர்த்தாவே, இந்த உண்மையை என் மனதில் கொண்டு நான் இன்று வாழ எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment